Connect with us

திரை விமர்சனம்

இதுல பார்ட் 2 வேறையா..? ராயன் படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!

By TamizhakamJuly 26, 2024 3:33 PM IST

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை பெங்களூருவில் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

தனுஷ், எஸ் ஜே சூர்யா துஷ்ரா விஜயன் நடிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்துள்ளது. புதுப்பேட்டை படத்தில் செல்வராகவன் எப்படி படத்தை செதுக்கி இருப்பாரோ அதுபோல தனுஷ் இந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் இயக்கி இருக்கிறார்.

ராயன் படம் எப்படி இருக்கு..

தனது தங்கை மற்றும் தம்பியோடு சென்னைக்கு வருகின்ற தனுஷ் இரண்டு கேங்ஸ்டர் மத்தியில் மாட்டிக் கொள்கிறார். அப்படி மாட்டிக்கொண்ட இவர்கள் எப்படி அவர்களிடம் தப்பித்து வருகிறார்கள் என்பது தான் கதை.

இந்தப் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருக்கின்ற நடிகர் தனுஷ் ஏதோ ஒன்றை கோட்டை விட்டுவிட்டாரா என்று நினைக்க கூடிய வகையில் படம் உள்ளது.

அத்தோடு படம் முழுவதுமே மிகவும் சைலன்டாக நடித்திருக்க கூடிய தனுஷின் நடிப்பை பெரிதாக படத்தில் பார்க்க முடியவில்லை.

மேலும் எஸ் ஜே சூர்யா சித்தப்பு இடையே நடக்கின்ற பிரச்சனைகளில் தனுஷ் எப்படி இடையில் வருகிறார். இந்த இரண்டு கேங்ஸ்டர் களையும் சுட்டுக் கொள்ளக்கூடிய போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் வருகிறார். அதற்காக அந்த போலீஸ் அதிகாரி என்ன செய்கிறார் என்பதை சுற்றி கதை நகர்கிறது.

மேலும் படத்தின் முதல் பகுதி மிக ஸ்லோவாக நகர்ந்தாலும் இரண்டாவது பகுதி நிச்சயம் ஏதாவது ஒன்று இருக்கும் என்ற ரீதியில் நகர்ந்துள்ளது.

இதுல பார்ட் 2 வேறையா..?

ஆனால் இரண்டாவது பகுதியாவது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அந்த பாதியில் வெட்டு குத்து ரத்தம் என்று வன்முறைகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.

மேலும் படத்துக்கான கன்டென்ட் எங்கேயோ மிஸ் ஆகி உள்ளது அதுமட்டுமல்லாமல் இயக்கக்கூடிய நிலையில் இருந்திருக்கும் இவர் தனுஷ் தான் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தர மறந்து விட்டாரா என்று நினைக்கத் தோன்றுகிறது.

வில்லன் ரோலை பக்காவாக முடிவு செய்துவிட்டால் எந்த படமும் கண்டிப்பாக வெற்றி அடைந்து விடும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த வரை இரண்டு வில்லன்கள் உள்ள நிலையில் எதையோ படம் தவற விட்டு விட்டது.

இந்தப் படத்தின் மைனஸ் ஆக அடுத்தடுத்து வரும் காட்சிகளை எளிதாக அனைவராலும் யூகிக்க முடிகிறது என்று சொல்லியிருக்கிறார்.

திரைவிமர்சனம்..

அத்தோடு இந்தத் திரைப்படமானது ரஜினி நடித்த தர்மதுரை படத்தில் சாயலில் உள்ளது என்று சொல்லலாம். மேலும் இந்த படத்துக்கு பக்க பலமாக ஏ ஆர் ரகுமானின் இசை உள்ளது. அதிலும் குறிப்பாக உசுரே நீதானே என்ற பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

இந்த பாடலுக்கு கோடியோகிராபியை பிரபு தேவா செய்து இருக்கிறார். அது மிகவும் சிறப்பாக உள்ளது என்று செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அத்துடன் வெற்றிமாறனின் படங்களில் தொடர்ந்து நடித்திருப்பதால் அந்த படத்தில் சாயலை போல் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் குழந்தைகளோடு இந்த படத்தை பார்க்க முடியுமா என்பது சந்தேகமாக தான் உள்ளது. படம் முழுவதுமே ஒரே ரத்த கலரியாக தான் உள்ளது.

மேலும் நிறைய லாஜிக்கான கேள்விகளை கேட்க வேண்டும் இதையெல்லாம் ஏன் தனுஷ் மிஸ் செய்து விட்டார் என்று ஒரு சுமாரான மதிப்பீடை படத்திற்கு தந்திருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top