Connect with us

News

இதை பண்ணாம பாண்டிச்சேரியை தாண்ட முடியாது.. மிரட்டல் விடுத்த நபர்.. ஆண்ட்ரியா கொடுத்த பதில்..!

Published on : August 7, 2024 6:53 AM Modified on : September 29, 2024 6:53 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் பின்னணி பாடகியாகவும் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார்.

பாடகியாக ஆண்ட்ரியா:

மேலும் இவர் பிரபலமான நடிகைகள் பல பேருக்கு டப்பிங் கொடுத்தும் இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா.

அந்த திரைப்படத்தில் சரத்குமார் நடித்திருப்பார். முதல் படத்திலேயே ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து மங்காத்தா , ஒரு கல் ஒரு கண்ணாடி , விஸ்வரூபம், அரண்மனை, தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா நடித்த படங்கள்:

துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வடசென்னை , மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஆண்ட்ரியா நடித்த புகழ் பெற்ற நடிகையாகவும் நம்பர் ஒன் நடிகையாகவும் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஆங்கிலோ – இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவரான ஆண்ட்ரியா பார்ப்பதற்கு ஒல்லி பெல்லி தோற்றத்துடன். மாடர்ன் கிளாமர் அழகியாக பலம் வந்து கொண்டு இருப்பார் .

38 வயதாகும் இவர் பார்த்தால் அப்படி யாரும் சொல்லவே முடியாத அளவுக்கு தனது உடல் எடையை ஸ்லிம் பிட் தோற்றத்தில் வைத்திருப்பார்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பையும் தாண்டி பல்வேறு விளம்பரங்களிலும், கடை திறப்பு விழாக்களிலும், கச்சேரிகளிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.

இத பண்ணாமல் பாண்டிச்சேரி விட்டு போகமுடியாது:

இந்த நிலையில் சமீபத்தில் நகை கடை திறப்பு விழா ஒன்றுக்காக பாண்டிச்சேரிக்கு சென்ற ஆண்ட்ரியாவிடம் அங்கிருந்த ரசிகர்கள் பாடல் பாட சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள் .

அதிலும் ஒரு நபர் “பாட்டு பாடாமல் பாண்டிச்சேரி விட்டு போகவே முடியாது அக்கா” என கத்தி கூறி இருக்கிறார் .

அதற்கு ஆண்ட்ரியா ஓகே என்று கூறி புஷ்பாபு படத்தில் அவர் தமிழில் பாடிய ஊ சொல்றியா பாடலை பாடியிருந்தார்.

அப்போது பாடல் பாடி கொண்டிருந்தபோது ஆண்களின் புத்தி என்ற வரி மட்டும் அழுத்தமாக பாடி சைகை கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

அவரின் இந்த செயலை பலரும் பாராட்டினாலும் இணையத்தில் அவரை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.

More in News

To Top