நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் ( Keerthy Suresh ) காதலர் இவர்தான் என்று இணைய பக்கங்களில் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இவரைத்தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற தகவலும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
தயாரிப்பாளரும் நடிகருமான ஜி சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். திரை குடும்பத்தை பின்புலமாக கொண்டிருப்பதால் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. மிகப்பெரிய மார்க்கெட்டை ஓபன் செய்து கொடுத்தது.
அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பு வரவில்லை என்று ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. திரைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவும், குடும்பப்பாங்கான முகத்தோற்றம் மற்றும் வாட்ட சட்டமான உடல்வாகு இவற்றின் காரணமாக மட்டுமே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
மற்றபடி இவருக்கும் நடிப்புக்கும் துளியும் சம்பந்தமே இல்லை என்றெல்லாம் இணைய பக்கங்களில் விமர்சிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள்.
Keerthy Suresh Marriageஆனால் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அச்சுஅசல் சாவித்திரி போலவே வாழ்ந்து காட்டிவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று பாராட்டப்பட்டார்.
Keerthy Suresh Marriageஇந்த திரைப்படம் இவருடைய நடிப்பு திறமைக்கு மிகப்பெரிய சான்றாக அமைந்தது. இவ்வளவு கடினமான ஒரு கதையை அசால்டாக செய்து முடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு பல்வேறு மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமரான கதாபாத்திரங்களையும் நேற்று நடத்தி வருகிறார். மட்டுமில்லாமல் விருது விழாக்கள் விளம்பர நிகழ்ச்சிகள் கடை திறப்பு விழாக்கள் என பல்வேறு பொதுவழிகளுக்கு வரும் பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார்.
Keerthy Suresh Marriageஇந்நிலையில் கீர்த்தி சுரேஷ்-ன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கீர்த்தி சுரேஷ்-ன் நீண்ட நாள் தொழிலதிபர் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகின்றது
Loading ...
- See Poll Result