Connect with us

News

பிக்பாஸ் சீசன் 5 : இவர் கலந்து கொள்வது உறுதி..! – அப்போ.. வேற லெவல் தான்..!

By TamizhakamSeptember 4, 2021 4:43 PM IST

 

தமிழ் டிவி சேனல்களில் இதுவரை நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்பது அனைவரும் அறிந்தது தான். 

 

தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளது. அடுத்தவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்குள்ளும் உண்டு. 

 

அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் என கூறப்பட்டாலும், இந்த நிகழ்ச்சியில் நடத்தப்படும் போட்டிகள், இந்நிகழ்ச்சிக்காக அளிக்கப்படும் விளம்பரங்கள் ஆகியனவும் இந்நிகழ்ச்சி பலரின் ஃபேவரைட் ஷோவாக இருக்க முக்கிய காரணம்.

 

இந்நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக இரண்டு புரோமோ வெளியாகியுள்ளது. எனவே தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் அனைவருடைய அடுத்த கேள்வியாக இருப்பது இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள உள்ளது யார் யார் என்பது தான். 

 

இதுகுறித்த தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஷகிலாவின் மகளும், திருநங்கையுமான மிளா கலந்து கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

 

ஆனால் இது குறித்தும் எந்த ஒரு அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை… எனவே இவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top