Connect with us

News

“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது..” – புதிய பாதையில் கமல்ஹாசன்..!

By TamizhakamMarch 24, 2023 7:55 AM IST

தனது நீண்ட கால சினிமா பயணத்தில், மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது, கமல்ஹாசன் அதிகமாக சம்பாதித்தது பணத்தை காட்டிலும், மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை தான்.

மேலும், சினிமாவின் அனைத்து தொழில்நுட்பங்களிலும் புகுந்து விளையாடும் கமல், தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்து, தமிழ் சினிமாவை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே செலவழித்தவர் என்பதும், தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். இதை கமல்ஹாசனே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

நடிகராக இருந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிய பிறகு, கமல்ஹாசனின் பண தேவை அதிகரித்திருக்கிறது. அதுவும், கமல்ஹாசனின் சினிமா வரலாற்றிலேயே, பிளாக்பஸ்டர் மூவியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் தந்த ரூ. 300 கோடி வசூல், கமலை திக்குமுக்காட செய்துவிட்டது.

இனியும் தொடர்ந்து, பணத்தை அள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட கமல், அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட துவங்கினார். தனது படங்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற மற்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

மேலும், விஜய் டிவியில், ஆறு ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன்மூலம் விஜய்டிவி எம்.டி மாதவனுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தான் நடிக்கும் படங்கள் மற்றும் தனது தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற மற்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் சாட்டிலைட், ஓடிடி உரிமம் குறித்த விலைகளை மாதவனிடம் பேசி முடித்து விடுகிறாராம்.

படத்தின் நடிகர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் குறித்து இறுதியாக முடிவான பின், அந்த படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமங்களை வாங்கிக்கொள்ள சம்மதிக்கும் நிறுவனங்களில் இருந்தே, தயாரிப்புக்கான தொகைகளை அதற்கான ஒப்பதங்களுடன் கமல் பெற்று, படத்தின் தயாரிப்பு செலவுகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்பெல்லாம், கமல் சினிமாவின் வெற்றியில் மட்டுமே முழு கவனம் செலுத்தினார். வருமானத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. கோடிக்கணக்கில் சம்பாதித்தும், சினிமாவுக்காகவே அதை செலவழித்தார்.

இன்று அந்த நிலையை மாற்றி, புது ‘ரூட்’டில், கமல் தனது பயணத்தை துவங்கி இருக்கிறார். அதனால், ‘காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது’ என, கமல் பாடிய பாடல், அவருக்கே இப்போது சரியாக பொருந்தி விட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top