Connect with us

News

«வெள்ளாவி வச்சுத்தான் வளத்தாங்களா இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா» பல பலன்னு ஜொலிக்கும் ஆத்மிகா..!!

By TamizhakamMärz 19, 2023 8:05 AM IST

ஆத்மிகா:இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் அனைவரும் படத்தில் நடிப்பதை காட்டிலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டோக்களை பகிர்வதன் மூலமாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்க முடியும் என்ற அளவுக்கு இருக்கிறது தற்போதைய சமூக வலைதளங்கள்.

இந்த வகையில் சமூக வலைதளங்களில் போட்டோக்களை அதிகம் பகிர்வதில் முக்கிய பங்கு வைக்கிறார் ஆத்மிகா. நடிகை ஆத்மிகா நிறைய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இதன் மூலமாகவே இவருக்கு மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

நடிகை ஆத்மிகா இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதியுடன் ‹மீசையை முறுக்கு› என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக வந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் ஆக அமைந்தது. படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் மக்கள் மனதில் எளிதில் நுழைந்தார்.

ஆதிக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்றாக பொருந்தியதால் காதலர்கள் இந்த படத்தை கொண்டாடத் தொடங்கினர். இது ஆதியின் ஒரு ரியல் லவ் ஸ்டோரி என்பதால் இந்த படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

முதல் படமே வெற்றி படமாக அமைந்தாலும் ஆத்மிகாவுக்கு போதிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கப்படவில்லை. இவர் அரவிந்த்சாமி உடன் ‹நரகாசுரன்› என்ற திரைப்படத்தில் தற்சமயம் நடித்துள்ளார். அந்த படம் திரைக்கு இன்னும் வராத சூழ்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் எதுவும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் நிறைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக தொடங்கி இருந்தாலும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகும்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top