Connect with us

News

கள்ளக்காதல்.. பலமுறை அந்த முயற்சி.. வீட்டை விட்டு ஓட்டம்.. அஞ்சலியின் கேவலமான உண்மைகள்..!

By TamizhakamJuly 14, 2024 6:05 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. கருப்பு தேகத்துடன் சினிமாவில் உள்நுழையும் அனைத்து கதாநாயகிகளுக்கும் எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கும்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக அவர்களால் ஆக முடியுமா என்கிற தயக்கம்தான் அது. அந்த தயக்கம் இருந்தது என்றாலும் கூட தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக உருவெடுத்தவர் நடிகை அஞ்சலி.

முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் அஞ்சலிக்கு தெலுங்கில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

சினிமா அறிமுகம்:

அதன் மூலம் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை பெற்றார். கற்றது தமிழ் திரைப்படத்தில் அவரது ஆனந்தி என்கிற கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. பலரும் விரும்பும் கதாபாத்திரமாகவும் இருந்தது.

அதனை தொடர்ந்து அஞ்சலி தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற துவங்கினார். அதற்கு பிறகு அவர் நடித்த அங்காடி தெரு திரைப்படமும் வெகுவாக வரவேற்பு பெற்றது. டி நகரில் இருக்கும் ஜவுளி கடைகளில் உள்ள ஊழியர்கள் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அங்காடித்தெரு.

இயக்குனர் வசந்த பாலனால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளிவந்த காலத்திலேயே அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழில் இரட்டை சுழி, மகிழ்ச்சி, கருங்காலி என்று நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்றார் அஞ்சலி.

இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் திரைப்படம் அஞ்சலிக்கு ஒரு மாறுபட்ட திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் நடித்த பொழுது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

அஞ்சலி காதல்:

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசும்போது கூட அஞ்சலியும் ஜெய்யும் நன்றாகதான் காதலித்து வந்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ப்ளாட் வாங்கி குடியிருந்தனர். அதற்குப் பிறகு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தொடர்ந்து அஞ்சலி ஜெய்யிடம் மோசமாக நடந்துக்கொண்டதால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று பல்வேறு பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். ஆனால் அதை எல்லாம் பொய் என்னும் வகையில் அஞ்சலி ஒரு பேட்டியில் பேசும்பொழுது ஜெய் காதலிக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் களஞ்சியமும் அஞ்சலி குறித்து நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது அஞ்சலி காசுக்காக எதையும் செய்யக் கூடியவர். அவர் நிறைய நபர்களுடன் ஓடி போவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

ஒருமுறை தனது தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு நகையெல்லாம் எடுத்து அடகு கடையில் அடகு வைத்துவிட்டு வேறு ஒரு நபருடன் ஓட பார்த்தார். அதேபோல காசுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ன பாத்திரத்தில் நடிக்க சொன்னாலும் நடிப்பார் என்று ஒரு விஷயத்தை கூறியிருந்தார் இயக்குனர் களஞ்சியம். இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் கருங்காலி என்கிற திரைப்படத்தில் மட்டும் நடித்திருக்கிறார் அஞ்சலி.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top