Connect with us

News

பொதபொதவென நனைந்த நீச்சலுடையில் சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை பூமிகா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

Published on : July 7, 2024 8:30 PM Modified on : September 29, 2024 8:30 PM

தமிழ் சினிமாவில் ஒரு காலக்க்கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை பூமிகா. பெரும்பான்மையான தமிழ் நடிகைகள் போலவே பூமிகாவும் வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தவர்தான்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பிரபலமான நடிகையாக பூமிகா இருந்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த திரைப்படங்களில் பத்ரி, ரோஜா கூட்டம் மாதிரியான படங்கள் மிகவும் பிரபலமானவை. 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக யுவகுடு என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமானார் பூமிகா.

தமிழில் வாய்ப்பு பெற காரணம்:

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை அதில் அதிகமான கவர்ச்சிகள் இருந்தால்தான் கதாநாயகிகளாக பிரபலம் அடைய முடியும். பெரிதாக நடிக்க தெரியாவிட்டாலும் கூட கவர்ச்சிக்கு தெலுங்கு சினிமாவில் அதிக முக்கியத்துவம் உண்டு.

ஆனால் தமிழ் சினிமாவில் கவர்ச்சியை விட நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால் தொடர்ந்து தமிழில் முயற்சி செய்ய தொடங்கினார் பூமிகா. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே அவருக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. மேலும் தமிழில் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய் திரைப்படத்திலேயே வாய்ப்புகள் கிடைத்ததால் அவருக்கு அது ஒரு முக்கியமான திரைப்படமாகவும் அமைந்தது.

இரண்டாவது ஹிட் படம்:

அதனை தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த திரைப்படம் ரோஜா கூட்டம். ரோஜா கூட்டம் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது. ஒட்டுமொத்த கதையும் நடிகை பூமிகாவை மையமாக வைத்து செல்வதால் அந்த திரைப்படத்தை வெகுவாக அப்போது பாராட்டினர் சினிமா ரசிகர்கள்.

மேலும் அந்த திரைப்படத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே பெரும் வெற்றியை கொடுத்தன. ஒரு கட்டத்திற்கு பிறகு நடிகை பூமிகாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. இனி கதாநாயகியாக நடித்தால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காது என்பதை அறிந்தார் பூமிகா.

அதற்குப் பிறகு மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார் அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் வெளியான சீதாராமனம், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படங்களில் கூட நடித்திருந்தார் பூமிகா.

என்னதான் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் கூட முன்பு கதாநாயகியாக நடித்த நடிகை என்பதால் தொடர்ந்து அழகிய நீச்சல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூமிகா.

More in News

To Top