Connect with us

News

நடிகரை காதலித்து கழட்டி விட்ட நடிகை மீனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Published on : August 18, 2024 6:33 PM Modified on : September 29, 2024 6:33 PM

சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. மீனா முதன் முதலில் மலையாள சினிமாவில்தான் அறிமுகமானார். மலையாளத்தில் எக்கச்சக்க படங்களில் சிறுமியாக நடித்த பிறகுதான் மீனாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழிலும் நிறைய திரைப்படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார் மீனா. அதில் அன்புள்ள ரஜினிகாந்த் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு பிறகுதான் மீனா அதிகமாக மக்கள் மத்தியில் தெரிய துவங்கினார்.

நடிகை மீனா

அதற்கு பிறகு ரஜினியுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் இவர் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார். மீனா ரஜினியுடன் மட்டுமின்றி நிறைய நடிகர்களுடன் குழந்தை கதாபாத்திரத்தில் நடந்து விட்டு பிறகு அவர்களுக்கு கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

அந்த அளவிற்கு அதற்குப் பிறகு பிரபலமடைந்தார் மீனா. மீனா மிக அழகாக இருந்ததால் அவருக்கான ரசிகர்கள் என்பதும் அதிகமாக இருந்து வந்தனர். ரஜினியுடன் மீனாவிற்கு கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆனதால் எஜமான் திரைப்படத்திற்கு பிறகு வீரா, முத்து என்று இன்னும் இரண்டு திரைப்படங்களில் சேர்ந்து நடித்தார் மீனா.

காதலித்து கழட்டி விட்ட சம்பவம்:

இந்த நிலையில் மீனாவை திருமணம் செய்ய அப்போதைய காலகட்டத்தில் நிறைய நடிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மீனா தெளிவாக இருந்தார். மேலும் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தார்.

இந்த நிலையில் 1990களில் மீனா குறித்த ஒரு சர்ச்சை இருந்து வந்தது திருமணமான ஒரு நடிகர் மீது மீனா காதலில் இருந்ததாக ஒரு பேச்சு இருந்து வந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை மீனா பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

அந்த சமயத்தில் பிரபுதேவாவிற்கும் மீனாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த படத்திலும் அதற்கு தகுந்தாற் போல இவர்கள் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகமாகவே இருந்தன. இந்த நிலையில் பிரபு தேவாவை காதலித்து வந்த மீனாவிற்கு அவரது தோழிகள் உபதேசம் செய்து இருக்கின்றனர்.

பிரபு தேவா அனைத்து நடிகைகளிடமே நெருங்கி பழகக் கூடியவர் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். அதற்குப் பிறகு இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த மீனா அதற்குப் பிறகு யோசித்து விட்டு பிரபுதேவாவை விட்டு விலகி இருக்கிறார். அதற்கு பிறகு தன் வேறு ஒரு நபருடன் மீனாவிற்கு திருமணம் நடந்து இருக்கிறது.

More in News

To Top