Connect with us

News

என் உடம்பில் அழகான வளைவு இது தான்..! சீரியல் நடிகை நித்யா ராம் ஓப்பன் டாக்..!

By TamizhakamAugust 10, 2024 9:34 PM IST

தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்து வரும் நடிகையாக நடிகை நித்யா ராம் இருந்து வருகிறார். நடிகை நித்யா ராமின் தந்தையான கே.எஸ் ராமு ஒரு நடன கலைஞராவார்.

அவர்தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுபோல நித்யாவும் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது கல்லூரி படிப்பை முடித்த நித்யா ராம் தொடர்ந்து நடனத்தின் மீது ஈடுபாடு காட்டி வந்தார்.

நடிகை நித்யா ராம்

இந்த நிலையில் ஜி கன்னடா சேனலில் இவருக்கு சின்ன திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு சீரியலில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் அவள் என்கிற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவள் சீரியல் ஒரு வருடம் மட்டுமே ஒளிபரப்பான சீரியல்.

இருந்தாலும் ஓரளவு இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வெகு வருடங்கள் தமிழில் பெரிதாக இவர் நடிக்கவில்லை ஆனால் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் சீரியல்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.

உடம்பில் அழகான வளைவு

அதே சமயம் கன்னடத்தில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். தமிழில் வெகு வருடங்கள் கழித்து 2017 ஆம் ஆண்டு நந்தினி என்கிற சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நந்தினி சீரியல் சுந்தர் சி யால் தயாரிக்கப்பட்ட சீரியல் ஆகும்.

தமிழ் கன்னடம் என்று இரண்டு மொழிகளிலும் இந்த சீரியல் ஒளிபரப்பானது. வட இந்தியாவில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற நாகினி சீரியலை அடிப்படையாகக் கொண்டு நந்தினி சீரியல் எடுக்கப்பட்டது.  இந்த சீரியலுக்கு தென்னிந்தியாவில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

ஓப்பன் டாக்

இதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் இந்த சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியல்தான் நித்யாராமை அதிகமாக பிரபலமாக்கியது என்று கூறலாம். அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றார் நித்யா ராம். இப்பொழுது தமிழில் அவர் அண்ணா என்கிற ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கும் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் ஒரு பேட்டியில் உங்கள் உடம்பில் அழகான வளைவு என்றால் எதை கூறுவீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த நித்யா ராம் எனது உடம்பில் அழகான வளைவு என்றால் அது என்னுடைய சிரிப்புதான் என்று பதில் அளித்து இருக்கிறார். தொடர்ந்து நித்யா ராம் இப்போதைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top