பெப்சி உமா குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. ஒரு காலத்தில் சினிமா நடிகைகளை மிஞ்சிய பிரபலம் இவருக்கு கிடைத்தது. இப்போதுதான் சமூக வலைதளங்கள் youtube நிறைய தொலைக்காட்சி சேனல்கள் ஆயிரக்கணக்கான தொகுப்பாளர்களை பார்க்கிறோம்.
ஆனால், அன்று இருந்தது ஒரே டிவி சேனல் தான் அது சன் டிவி. இன்றுவரை பலரும் கேபிள் கனெக்சன் இருக்கிறதா..? என்று கூட கேட்க மாட்டார்கள். சன் டிவி கனெக்சன் இருக்கிறதா..? என்றும் கேபிள் ஆப்பரேட்டரை.. சன் டீவிக்காரர். என்று அழைத்து வருகிறார்கள்.
அப்படி ஒரு சூறாவளியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது சன் டிவி. 90களில் பலரும் சன் டீவி பார்க்க வேண்டும் என்பதற்காகவே தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கினார்கள். திரும்பிய பக்கமெல்லாம் சன் டிவி.. சன் டிவி,.. சன் டிவி.. அந்த டிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் முன்பு அவர்களுடைய இல்லத்திற்கே வந்து நின்றவர் தான் பெப்சி உமா.
இவரிடம் பேசுவதற்கு போட்டா போட்டி போட்ட காலங்கள் எல்லாம் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவில் இருக்கலாம்.. திரைப்படங்களில் இவர் நடிக்க மறுத்த காரணத்தினால் திரைப்படங்களில் இவர் சம்பந்தப்பட்ட காட்சி வைக்க வேண்டும் என்பதற்காக இவருடன் தொலைபேசியில் பேசுவது போலவே காட்சிகள் எல்லாம் பல படங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித் பெப்சி உமாவா பேசுவது… நான் உங்களுடைய தீவிர ரசிகன்.. என்று நடிகர் அஜித் பேசுவார்.. அதன் பிறகு நடிகர் விவேக் பல திரைப்படங்களில் பெப்சி உமாவிடம் பேசுவது போல பேசியிருக்கிறார்.
இப்படி பல்வேறு திரைப்படங்களில் இவருடைய ரெபரன்ஸ்களும் இடம் பெற்று இருக்கிறது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் அவர்களுடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிகைக்கு கேட்டு பெப்சி உமாவை தொந்தரவு செய்து இருக்கிறார்கள் இயக்குனர்கள்.
ஆனால் நான் சினிமா நடிகையாக விரும்பவில்லை. சினிமா எனக்கு பிடிக்காது. நான் தொகுப்பாளியாகவே இருந்து விடுகிறேன் என்று தனக்கு வந்த அத்தனை வாய்ப்புகளையும் மறுத்தவர் நடிகை பெப்சி உமா.
சினிமாவில் நடிப்பதற்கே மறுத்த பெப்சி உமாவை அப்போது வாலிப வயதில் இருந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட ஆசைக்காக அவரை அணுகி இருக்கிறார்.
ஆனால், முடியவே முடியாது என மறுத்திருக்கிறார். அடுத்தடுத்து நாட்களில் இவருடைய தொந்தரவு அதிகமாகி இருக்கிறது அவருடைய அதிகாரம் பலத்தை பயன்படுத்தி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்துள்ளார்.. நீ வேலை செய்யக்கூடிய தொலைக்காட்சிதான் உன்னுடைய அடையாளம்.. அந்த தொலைக்காட்சியில் உன்னை வேலை செய்யும் விடாமல் ஆக்கி விடுவேன் என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார்.
அப்படியான வேலையே எனக்கு வேண்டாம்.. போங்கடா.. என்று அந்த தொலைக்காட்சியை விட்டு அதிரடியாக வெளியேறினார் பெப்சி உமா. அதன் பிறகும் இவருக்கு பல்வேறு தொந்தரவுகள் கொமே.. நீங்கள் செய்வது சரி கிடையாது.. நான் உங்களை மிகப்பெரிய உயரத்தில் வைத்திருந்தேன்.. இனிமேலும் இதுபோல் நீங்கள் நடந்து கொண்டீர்கள் என்றால் மீடியா முன்பு எல்லா விஷயத்தையும் ஆதாரங்களுடன் கூறி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
அப்போதும் அந்த அரசியல்வாதியை அடங்காமல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவருடன் இருந்த சில அரசியல்வாதிகள் ஒரு வேலை அவங்க மீடியாவுக்கு சென்று விட்டால்.. விஷயம் விவகாரம் ஆகிவிடும்.. ஏற்கனவே வேறு ஒரு தொகுப்பாளினியுடன் உங்க பெயரை சேத்து வச்சு வதந்தி பரவிட்டு இருக்கு.. இதுல இவங்களும் பேசுனா உங்களுக்கு பெரிய பிரச்சனை ஆகிடும்.. அவர் என்ன உலகத்தில் இல்லாத பெரிய அழகியா.. உனக்கு கிடைக்காத பெண்களா.. என்று அவரை ஆசுவாசப்படுத்தியதன் காரணமாக ஒதுங்கி கொண்டார் அந்த அரசியல் வாதி.
அதன் பிறகு மற்றொரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சென்றார் பெப்சி உமா. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு அப்படியே தன்னுடைய வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
அதே சமயம், பெப்சி உமாவை சீண்டிய அந்த அரசியல்வாதி யார்..? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. இந்த அரசியல்வாசி.. அந்த அரசியல்வாதி.. என ஆளுக்கு ஒரு பெயரை சொல்வதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது.
ஆனால் இதுவரை, இன்னார் தான் எனக்கு இந்த தொந்தரவு கொடுத்தது என பெப்சி உமாவே வெளியில் சொல்லாத போது,.. வேறு யார் வந்து இவர் தான் என்று சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்காது என்பது தான் நிதர்சனம்.