Connect with us

News

எம்புட்டு நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து..! – தீயாய் பரவும் ஸ்ரீதிவ்யா-வின் நச் க்ளிக்ஸ்..!

By TamizhakamMärz 23, 2023 11:35 AM IST

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அறியப்பட்ட நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பிறந்தவர்.

நடிகை ஸ்ரீதிவ்யா தனது மூன்று வயதில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் இவர் பத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்து வந்தார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் பல முக்கியமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் ஸ்ரீதிவ்யா.

தெலுங்கு திரைப்பட துறையில் ரவி பாபு அவர்கள் 2010 ஆம் ஆண்டு இயக்கிய மாகாணசாரா என்ற தெலுங்கு திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிவ்யா.

மனசாரா என்ற அந்த தெலுங்கு படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோல்வியை தழுவியதால் அதைத் தொடர்ந்து சில காலம் எந்த படங்களில் நடிக்காமல் இருந்தார் ஸ்ரீ திவ்யா. அதன் பிறகு 2012ல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை ஸ்ரீதிவ்யா இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது இதன் மூலம் தொடர்ச்சியான பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை ஸ்ரீதிவ்யா. 

இதன் பிறகு 2013 ஆம் ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா இந்த படம் தமிழ்நாட்டின் வட்டி தொட்டி என்றும் பல மாதங்களாக ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது இது சிவகார்த்திகேயன் திரைத்துறையில் முதன் முதலில் வெற்றியடைந்த திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படம் நடிகர் ஸ்ரீதிவ்யாவுக்கும் மிகப்பெரிய திருப்புவனையாக அமைந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து  2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தில் ஜென்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த படமும் ஓரளவு வெற்றி அடைந்தது.

அதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெள்ளைக்கார துரை என்ற திரைப்படத்தின் மூலம் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரீதிவ்யா அந்த திரைப்படத்தின் பாடல்கள் மூலம் மிகப் பெரிய புகழை அடைந்தார்.

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை என்ற படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ் திரைப்பட துறையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் புதிய தொடங்கியது.

 கடைசியாக 2018 ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் எந்த திரைப்பட வாய்ப்புகளும் வராத நிலையில் ஸ்ரீதிவ்யா வெளியில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

சமூக வலைதளங்களிலும் அப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்த ஸ்ரீ திவ்யா சில வருடங்களாக எந்தவித  புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் ஸ்ரீதிவ்யா இங்கே என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top