தமிழில் அபி என்கின்ற அபிமன்யு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை உமாஸ்ரீ ( Umashree ). இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமா குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் சினிமா தொழிலுக்கு வந்ததுக்கு காரணமே என்னுடைய தோழிகள் தான்.
சினிமா என்றாலே எனக்கு பயம். ஆனால் என்னுடைய தோழிகள்தான் எனக்கு அந்த பயத்தை போக்கி சினிமாவுக்குள் அழைத்து வந்தனர். முதல் படத்தில் முதல் காட்சியில் நடிக்கும் போது நான் பேசிய வசனங்கள் எல்லாம் பயந்து கொண்டே பேசினேன்.
நிறைய டேக் சென்றது. ஆனால், இயக்குனர் எனக்கு ஊக்கம் அளித்து நடிக்க வைத்தார். அவர்தான் எனக்கு குரு. அந்த படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி இன்னொரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள்.
இப்படி தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. நான் நடித்த கோழி கூவுது படத்தின் படம் முடிந்த பிறகு ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் பட வாய்ப்பு கிடைத்தது.
Image Source : instagram.com/umashreeactress/இப்படித்தான் என்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது. ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு இன்னொரு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
Image Source : instagram.com/umashreeactress/எல்லாவற்றிற்கும் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு நன்றிகள். எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, சூர்யா, அஜித், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களின்ன் படங்களில் ஏதாவது ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட மாட்டோமா..? என்ற ஆசை இருக்கிறது. அதற்கான காலம் அமையும் என காத்திருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
Loading ...
- See Poll Result