Connect with us

News

இதனால் தான் விவாகரத்து..! காரணத்தை போட்டு உடைத்த பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா..!

By TamizhakamJuli 22, 2024 5:58 AM IST

நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர்.

மேலும் பெங்களூரில் இருக்கும் மவுண்ட் கவர்மெண்ட் கல்லூரியில் மைக்ரோ பயாலஜியில் பட்டம் பெற்ற இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

நடிகை வர்ஷா பொல்லம்மா..

நடிகை வர்ஷா பொல்லம்மா ஆரம்ப காலகட்டத்தில் ராஜா ராணிகள் நஸ்ரியா நசீம் பேசிய டயலாக்கை டப்மாஸ் காணொளியில் செய்ததை அடுத்து பிரபலமான நபராக மாறினார். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தமிழில் இவர் 2015 -ஆம் ஆண்டு சதுரன் என்ற படத்தில் அறிமுகமானார் அதனை அடுத்து 2017 யானும் தீயவன் எனும் படத்தில் நடித்த இவர் 2018-இல் கல்யாணம் அதே ஆண்டு சீமத்துரை 2019-இல் பிகில் மற்றும் 2020-இல் மிடில் கிளாஸ் மெலடிஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் நட்சத்திர ஜோடிகள் மத்தியில் விவாகரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நாக சைதன்யா-சமந்தா மற்றும் தனுஷ்- ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்-சைந்தவி போன்றவர்கள் அண்மையில் விவாகரத்து பெற்றது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

மேலும் சமீப காலமாக ஜெயம் ரவி-ஆர்த்தி ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் போன்றவர்கள் விரைவில் விவாகரத்து பெற இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி ஊடகங்களில் கசிந்து வருகிறது.

இப்படி திரை உலகை மட்டுமல்லாமல் சாதாரண மக்களிடையேயும் இந்த விவாகரத்து அதிகரிக்க காரணம் என்ன என்ற விஷயத்தை வர்ஷா பொல்லம்மா விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

விவாகரத்துக்கு இதுதான் காரணம்..

மேலும் அதிகரித்திருக்கும் விவாகரத்துக்கள் பற்றி இவர் சொல்லும் போது தீபிகா நாராயணன் பரத்வாஜ் கூறிய விஷயத்தை பதிவிட்டு பேசி இருப்பது பலருக்கும் பல்வேறு வகையான சிந்தனைகள் ஏற்பட காரணமாகி உள்ளது.

இந்த பதிவில் திருமணத்திற்கு பிறகு நடக்கின்ற விவாகரத்துக்கு குறிப்பாக இந்த காலத்தில் பெறப்படும் விவாகரத்துகளுக்கு என்ன காரணம் என்பதை கேட்டிருக்கிறார்.

 

இதனை அடுத்து இந்த போஸ்டை வர்ஷா பார்த்து அதற்கு கல்யாணம் என்ற பதிலை அளித்திருக்கிறார்.

உண்மையை உடைத்த பிகில் பட நடிகை..

இதனை அடுத்து இவர் அளித்திருக்கக் கூடிய இந்த பதிலுக்கு கலவை ரீதியான விமர்சனங்கள் தற்போது வரை வேகமாக வந்துள்ளது. இதனை அடுத்து இவரது பதிவு உண்மை தான் தற்போது செய்து கொள்ளப்படும் கல்யாணங்கள் நீடித்து நிறைப்பதில்லை என்பதை பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் சிலர் இதெல்லாம் ஒரு முக்கியமான ஒன்று என்று காமெடியெல்லாம் செய்ய வேண்டாம் என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். அத்தோடு இவர் கூறிய அதே கருத்தை தான் பார்த்திபன் பேசி இருக்கிறார்.

மேலும் அவர் பேச்சில் ஒருவருக்கு யார் மீது வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் காதல் ஏற்படும். அதற்கு திருமணம் ஒரு தடை என்பதால் தான் விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது என்ற ரீதியில் பார்த்திபன் சீதாவிடம் இருந்து விலகிய காரணத்தை கூறினார்.

இதனை அடுத்து வர்ஷா பொல்லம்மாவினுடைய பதிவும் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் கருத்தும் ஒன்றாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது திருமணம் ஆன சில மாதங்களிலேயே விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதால் தற்போது இருக்கும் இடம் தலைமுறை திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள்.

இது நம்முடைய கலாச்சாரத்தை புரட்டிப் போடக் கூடிய வகையில் இருக்கும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். மேலும் விவாகரத்துக்கு என்னென்ன காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக கமெண்ட் செக்ஷனில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top