Connect with us

News

ஆணுறையின் அடையாளமாகவே மாறிவிட்ட பிரபல நடிகை..! – அட கொடுமைய..!

Published on : May 19, 2023 8:00 PM Modified on : May 19, 2023 8:00 PM

திரைப்பட நடிகையான ராக்கி சாவந்த் (Rakhi Sawant) பன்முக திறமையை கொண்டவர். மிகச் சிறந்த நடனக் கலைஞர், அரசியல்வாதி அற்புதமான நடிகை இதுபோன்ற பெயர்களுக்கு சொந்தக்காரர். பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழைப் பொறுத்தவரை கம்பீரம் என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பாலிவுட் திரை உலகில் கவர்ச்சி நடிகையாக திகழும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார். இதனை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டு தொழில் அதிபர் ரித்தேஷ் என்பதை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

எனினும் நீண்ட நாட்கள் இவரது மண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். மேலும் இவர் அடில் துரானி என்பவர் உடன் டேட்டிங் செய்து வருவதாக சர்ச்சைகள் பல ஏற்பட்டு கிசுகிசுக்கள் வெளிவந்தது.

rocky chavanth

மேலும் சர்ச்சை நாயகியாக திகழும் இவர் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஆணுறை விளம்பரமானது பலவிதமான சர்ச்சைகளை கிளப்பிவிட்டது. மேலும் இவர்  குறிப்பிட்ட பிராண்டின் அம்பாசிடராக மாறிவிட்டாரா என்று கேட்கத் தோன்றுகிறது.

 அந்த பிராண்ட் Beboy ஆணுறையின் வகைகள் பற்றி வீடியோ ஒன்றினை தான் தற்போது பதிவு செய்ததன் மூலம் பல விதமான சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்து விட்டார். மேலும் இந்த வீடியோவானது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

rocky chavanth

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை குறைக்க இதுபோன்ற ஆணுறை பற்றிய விழிப்புணர்வுகளை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்பதும் அந்த விழிப்புணர்வை இவர்களைப் போன்ற பிரபல நடிகைகள் செய்வதால் அது விரைவில் மக்களைச் சென்றடையும் என்ற கோணத்தில் இது பற்றிய வீடியோ தற்போது பேசும் பொருளாகிவிட்டது.

என் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் அதை நான் செய்ய தயங்க மாட்டேன். இதனால் எனக்கு கெட்ட பேர் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டேன் என்று அவர் கருத்துக்களை கூறியிருக்கிறார்.

rocky chavanth

தன் மூலம் நன்மை நடக்கும் பட்சத்தில் இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை பதிவு செய்வதில் நான் தயக்கம் காட்ட மாட்டேன். மேலும் பாலியல் என்பது தவறான ஒன்றல்ல என்று அதனை விளக்கமாக எடுத்துரைத்திருக்கும் இவரது தைரியத்தை பாராட்ட வேண்டும்.

எனினும் சமூக வலைத்தளங்களை அதிகமாக பார்வை இடக்கூடிய அனைவரும் இவரது செயலை எப்படி எடுத்துக் கொள்வதில் என்று தெரியாமல் தற்போது தவித்து வருகிறார்கள். சிலர் இதை கிண்டலாகவும் நக்கலாகவும் பேசி வருகிறார்கள்.

More in News

To Top