பொன்னியின் செல்வன் படத்தில், பூங்குழலியாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) மணிரத்னம் இயக்கிய படம், கல்கியின் வரலாற்று நாவல், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்த படம் என்பதால், இந்த படத்தில் படகோட்டியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியும் அதிக கவனத்தை, ரசிகர்களிடம் பெற்று விட்டார்.
நடிப்புத் துறையில் மட்டுமின்றி, மாடலிங் துறையிலும் பணிசெய்து வருகிறார். இவர், கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். அதனால், மலையாள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.
Aishwarya Lekshmiஇவரும் மருத்துவம் படித்துவிட்டு, நடிப்புத் துறைக்கு வந்தவர். எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ நிறுவனத்தில், மருத்துவ படிப்பை படித்தார். அந்த கல்வி நிறுவனத்திலேயே தனது மருத்துவ பயிற்சிகளையும் நிறைவு செய்தார்.
கடந்த 2017ம் ஆண்டில், நண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாள படத்தில், அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இன்னும் சில விருதுகளும், படத்துக்கு கிடைத்தது,
Aishwarya Lekshmiஅடுத்து, 2019ம் ஆண்டில் தமிழில் ஆக்சன் படத்தில் நடித்தார், அடுத்து, தனுஷ் நடிப்பில் ‘ஜகமே மந்திரம்’ படத்தில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில், வெற்றிப் பெறவில்லை.
அதுவும், ஜகமே தந்திரம் படம், ஏனோ தனுஷ் ரசிகர்களே பார்க்காமல் புறக்கணித்த படமாக அமைந்துவிட்டது. ஆக்ஷன் படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் தனுஷ், விஷால் என முக்கிய நடிகர்களுடன் நடித்த படங்களாக இருந்தும், ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
Aishwarya Lekshmiஇந்நிலையில், கடந்தாண்டில் வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ படம், ஐஸ்வர்யா லட்சுமிக்கு, நல்ல வரவேற்பை, பாராட்டை பெற்றுத் தந்தது. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்.
கணவரின் கட்டுப்பாடுகளுக்கு துவக்கத்தில், பயந்து நடுங்கும் மனைவியாக இருப்பார். ஆனால், கணவரை அப்பாவியாக நடித்து ஏமாற்றும் கேரக்டராக இருந்து, பின்னாளில் ‘கட்டாகுஸ்தி’ வீராங்கணையாக, தனது கணவரை தாக்க வரும் ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில், ஐஸ்வர்யா லட்சுமி, தன்னை நிரூபித்தார். ரசிகர்களிடமும் பலத்த கைதட்டலை பெற்றார்.
Aishwarya Lekshmiஅதைத்தொடர்ந்து, இப்போது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா லட்சுமி பேசப்பட்டு இருக்கிறார்.ஆனால், கட்டாகுஸ்தி படத்தை பார்க்காமல் தவற விட்ட பலரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியை, தமிழ் சினிமாவுக்கு புதுமுகம் என்றே கருதுகின்றனர்.
ஆனால்,ஏற்கனவே தமிழில் சில படங்களில் அவர் நடித்தவர் என்பதுதான் உண்மை.இந்நிலையில், தமிழில் மேலும் சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் ஐஸ்வர்யா லட்சுமியை தேடி வந்துகொண்டே இருக்கின்றன. எனினும், நல்ல நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதற்காக அவர், காத்துக்கொண்டு இருக்கிறார்.
Aishwarya Lekshmiஇந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், நீளமான வராண்டா ஒன்றில் நின்றபடி கலர்புல் ஆன ஒரு மாடர்ன் டிரஸ்சில், ஐஸ்வர்யா லட்சுமி, பல விதங்களில் போஸ் தந்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய் உள்ளனர்.
வயது 30 ஐ கடந்திருந்தாலும், இன்னும் கல்லூரி மாணவி போல, ‘பளபள’ப்பும், வனப்பும் கொஞ்சமும் குறையலையே, எனவும், ‘உயிர் உங்களுடையது தேவி’ என்ற பொன்னியின் செல்வன் பட டயலாக்கையும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result