Connect with us

News

படிக்கும் போதே பிரபல கிரிக்கெட் வீரருடன்அது நடந்துச்சு..! ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா லட்சுமி..!

By TamizhakamFebruar 14, 2024 11:27 AM IST

மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகைகள் பலரும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 2017 ஆம் ஆண்டு வெளி வந்த நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து பல மலையாள திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் மாய நதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளி வந்த ஆக்சன் திரைப்படத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தனுஷ் உடன் இணைந்து 2021 இல் ஜகமே தந்திரம் என்ற படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார். மேலும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் வெளி வந்த கட்டா குஸ்தி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார். இந்த படத்தில் இவரது நடிப்பு விஷ்ணு விஷாலின் நடிப்பை விட சிறப்பாக ஜொலித்தது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

படிக்கும் போதே அது நடந்துச்சு..

திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து ஆறு வருடங்களை நிறைவு செய்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இது வரை தான் வெளி வந்த படங்களில் தன்னை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் என கூறலாம்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா லட்சுமி பேசும் போது இவர் படிக்கும் காலம் தொட்டு கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கை நேசித்ததாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் படிக்கும் போதே பிரபல கிரிக்கெட் வீரருடன் நடந்த விஷயம் இதுதானா? இந்த ரகசியத்தை தான் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி உரைத்திருக்கிறாரா? என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

மேலும் யுவராஜ் சிங் ஆடுகின்ற ஒவ்வொரு மேச்சையும் அதிகமாக பார்த்து ரசித்து உள்ளதாகவும், ஆனால் தற்போது கிரிக்கெட் பார்க்கவே நேரம் இல்லை அந்த அளவு பிஸியாக மாறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதிக அளவு யுவராஜ் சிங் மீது படு கிரேஸ் ஆக இருந்திருக்கக் கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விதவிதமான லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

இப்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ஐஸ்வர்யா லட்சுமி யுவராஜ் சிங்கை காதலித்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

தற்போது ஐஸ்வர்யா லட்சுமி ஒரு பான் இந்திய நடிகையாக உயர்ந்து இருக்கக்கூடிய சமயத்தில் இன்னும் பல தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள்.

எனவே இனி ஐஸ்வர்யா லட்சுமி காட்டில் அடை மழை அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வரும் காலங்களில் அது உண்மையாகும் போது நீங்களும் அதை உணர்ந்து கொள்வீர்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top