Connect with us

News

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து முடிவுக்கு காரணம் இவர் தான்.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

By TamizhakamAugust 1, 2024 6:44 AM IST

உலக அழகியும் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ் தெலுங்கு, பெங்காளி, ஆங்கிலம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு மணிரத்தினம் தான் முதன்முதலில் இதுவரை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் .

தமிழ் படங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய்:

அதன்படி இருவர் திரைப்படத்தில் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ் , கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே பாலிவுட்டில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் அங்கு நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்தார் .

மேலும், தமிழில் இராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் வரை நடித்திருக்கிறார் .

இவர் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த அபிஷேக் பச்சனை காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

காதல் முறிவு… திருமணம்:

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய் உள்ளிட்டோரை காதலித்து அவர்களைப் பிரிந்துவிட்டார்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு ஆரத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது.

இப்படியான சமயத்தில் திடீரென இருவருக்கும் மன கருத்து ஏற்பட்டு விவாகரத்து செய்ய உள்ளதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது .

மேலும் , இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது, பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் மேலும் அதிர்ச்சி கிளம்பி இருக்கிறது.

வெடிக்கும் விவாகரத்து பிரச்சனை:

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமே இந்த பிரபல நடிகை தான் எனக் கூறியிருப்பது மேலும் பெரும் அதிர்ச்சிகளை கிளப்பி இருக்கிறது.

அதாவது, பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும் கண்ணதாசனின் மகளும் ஆன நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டு இருக்கிறாராம்.

நடிகை ரேகா ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சனின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரேகாவும் ஜெயா பச்சனும் நீண்ட நாள் பேசிக்கொள்வதில்லை.

விஷயம் இப்படி இருக்கும் சமயத்தில் ஐஸ்வர்யா ராய் ரேகாவுடன் நட்பு வைத்திருப்பது ஜெயா பச்சனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

எல்லாத்துக்கும் அந்த நடிகை தான் காரணம்:

இதனால் குடும்பத்தில் அடுத்தடுத்த விரிசல்கள் ஏற்பட்டதாக சபிதா ஜோசப் தெரிவித்திருக்கிறார். இதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யாராய் தனது மகளுடன் தனியாக வந்து கலந்து கொண்டார்.

அதேபோல அபிஷேக் பச்சன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் முன்னாள் காதலன் சல்மான்கான் உடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவர்கள் மீண்டும் இணைய போவதாக கூறப்பட்டது .

ஆனால் இது முற்றிலும் பொய் என செய்தி என ஐஸ்வர்யா ராய் தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் இருவரும் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறார் சபிதா ஜோசப். காரணம் அபிஷேக் பச்சன் குடும்பம் பாரம்பரிய குடும்பம் என்பதால் அவர்கள் நிச்சயம் இந்த விவாகரத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். இணைந்து வாழும்படி பேசி முடிவெடுப்பார்கள்
என்றார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top