Connect with us

News

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்..?

By TamizhakamJuly 16, 2024 12:35 PM IST

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனர் கஸ்தூரிராஜா மகனும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் கொண்டார்.

இதனை அடுத்து இனிமையாக சென்று கொண்டிருந்த இவரது இல்லற வாழ்க்கைக்கு சான்றாக யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாம் திருமணத்திற்கு ரெடி..

மேலும் இரண்டு குழந்தைகளுக்காகவாது இவர் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பத்தார் இடையே இருந்ததோடு இரண்டு குடும்பத்தாரும் இவர்களை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சிகளை செய்து பார்த்தார்கள்.

எனினும் அவர்களது சமாதான உடன்படிக்கைக்கு ஐஸ்வர்யா எந்த வகையிலும் இடம் கொடுக்காததை அடுத்து இவர்களது பிரிவு உறுதியானதோடு மட்டுமல்லாமல் விவாகரத்துக்காக குடும்ப நல கோர்ட்டை அணுகியதும் இணையங்களில் வைரலாக பரவியது.

இதை எடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் தனுஷின் நடத்தை என்று அது குறித்து பல்வேறு வகையான கருத்துக்களும் கிசுகிசுக்களும் இணையங்களில் தொடர்ந்து பரவியது எனினும் இது குறித்து இருவரும் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

இந்நிலையில் தனுஷை விட்டு பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரை உலகில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் தான் இவர் லால் சலாம் என்ற படத்தை தனது அப்பாவின் துணையோடு கெஸ்ட் ரோலில் ரஜினியை நடிக்க வைத்து வெளியிட்டார்.

எனினும் இந்த திரைப்படம் அவர் நினைத்த அளவு வெற்றியை இவருக்கு பெற்று தரவில்லை இதைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் இணையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி ஒர்க் அவுட் செய்கின்ற வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றிருக்கிறார்.

அந்த நடிகர் தான் மாப்பிள்ளை..

அதைத் தொடர்ந்து இவரது இரண்டாவது திருமணம் குறித்து சில விஷயங்கள் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருவதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொள்ளப் போகும் அந்த இரண்டாவது மாப்பிள்ளை யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதனை அடுத்து எந்த கேள்விக்கு பதிலாக விவாகரத்தான கன்னட நடிகர் ஒருவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் ட்ரெண்டிங்காக மாறி வருகிறது.

மேலும் இது குறித்து உண்மை நிலையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டால் மட்டுமே தெரிய வரும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமானதாகும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top