Connect with us

News

மூஞ்சி மேல நல்லா பேசுவாங்க.. ஆனா.. உங்களுக்கே தெரியும்ல.. வரவேற்பை பெற்ற அக்ஷரா ஹாசன் பேச்சு..!

By TamizhakamJuly 19, 2024 3:55 AM IST

தமிழ் திரைகளுக்கு முன்னணி நடிகை வந்திருக்க வேண்டிய அக்ஷரா ஹாசன் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சரிதாவிற்கு பிறந்த இரண்டாவது மகள் ஆவார். இவர் திரைப்பட நடிகையாக, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர் என பன்முகத் திறமையை கொண்டவர்.

அக்ஷரா ஹாசன் தன் தாயுடன் மும்பையில் வசித்து வருகிறார். இளமையிலிருந்து இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதை அடுத்து புத்த மதத்தில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சென்னையில் இருக்கக் கூடிய ஷார்ட் ஷூ டான்ஸ் கம்பெனியில் நடனத்தை கற்றுக்கொண்டு இருக்கிறார்.

மூஞ்சி மேல நல்லா பேசுவாங்க..

தனது பள்ளி படிப்பை சென்னையிலும் பின்னர் பெங்களூரில் இருக்கும் இந்த சர்வதேச பள்ளிகளும் பயின்று இருக்கிறார். இவர் தனது தந்தை உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகை சரிதாவுக்கு இடையே ஏற்பட்ட விவாகரத்தை அடுத்து தன் தாயுடன் மும்பையில் வசிக்க ஆரம்பித்தார்.

அது மட்டும் அல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டு ஷமிதா என்ற ஹிந்தி படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து 2017- ஆம் ஆண்டு மற்றொரு ஹிந்தி படத்தில் நடித்த இவர் விவேகம் என்ற தமிழ் படத்தில் அஜித் உடன் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் தந்தை இயக்கி வந்த சுபாஷ் நாயுடு என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய அந்த படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டதை அடுத்து 2019-ஆம் ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த கடாரம் கொண்டான் என்ற படத்திலும் நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக சொந்தமாக ஜி 5 என்ற இணைய செயலியில் பிங்கர் டிப் என்ற இணையதள நாடகத் தொடரிலும் நடித்து ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அக்ஷரா ஹாசன் சமீபத்தில் கலாட்டா மீடியாவிற்காக கொடுத்த பேட்டியில் மூஞ்சி மேல நல்லா சொல்லுவாங்க என்று சென்னை தமிழில் பலரையும் கவரக்கூடிய வகையில் சில உண்மைகளை பேசி இருக்கிறார்.

ஆனா உங்களுக்கு தெரியும்ல..

அந்த வகையில் அவர் மூஞ்சி மேல நல்லா பேசுவாங்க அதுக்கப்புறம் என்ன அதன் பின்னாடி என்ன இருக்கு.. அப்படிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும் என்று சொன்ன விஷயம் அனைவரையும் கவர்ந்திருப்பதோடு அந்த விஷயம் உண்மை என்ற நம்பகத்தன்மையை ரசிகர்கள் மத்தியில் சொல்ல வைத்து விட்டது.

இதைத்தான் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்கள் என்று சொல்வார்கள். நேராக பார்க்கும் போது உதட்டில் உறவு வைத்துக் கொண்டு உள்ளத்தில் பகையோடு இருக்கும் மனிதர்கள் பலரையும் இந்த பூமியில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

அதைத் தான் அக்ஷரா ஹாசன் அக்ஷர தெளிவாக நேர்த்தியான முறையில் ரசிகர்களுக்கு எளிதில் புரியக் கூடிய வகையில் சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து தொகுப்பாளனி இதை நாம் கண்டுபிடிக்க முடியாதல்லவா? என்று கேள்வியை கேட்க..

சிரித்த வண்ணம் இதுபோல நிறைய பேர் உங்களிடம் சொல்வார்கள் அல்லவா? என்று பதில் அளித்து அனைவரையும் யோசிக்க வைத்துவிட்டார்.

அக்ஷரா ஹாசனின் வரவேற்பை பெற்ற பேச்சு..

இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட நபரை வைத்து கன்பார்ம் செய்ய வேண்டும் என சொன்னீர்களா? என்று கேட்க வேண்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

அடுத்து உங்களுக்கே மிக தெளிவாக தெரியும். அவர்கள் சத்தியமாக சொல்கிறார்களா அல்லது வேறு நோக்கத்தோடு சொல்கிறார்களா? என்று சொன்ன பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பல சந்தர்ப்பங்களில் பேட் மௌத், நக்கலாக பேசுவது என்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்க கூடிய அக்ஷரா ஹாசன் நேரில் நம்மை பார்க்கும் போது சமத்து அப்படி, இப்படி என்று பேசுபவர்களை பற்றி விமர்சனம் செய்திருப்பது பேசும் பொருளாகிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top