நடிகர் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தை குறித்து பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிலையில் தற்சமயம் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதால் நிறைய செலிபிரிட்டிகள் காஷ்மீரில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் இளைஞர்கள் இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்தவுடனே லியோ சூட்டிங் இல் நீங்களும் இருக்கிறீர்களா என்று அனைவரையும் கேள்வி கேட்கின்றனர்.
அந்த அளவிற்கு இந்த படம் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த லியோ படத்தில் வில்லன்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே நாலு வில்லன்கள் இருக்கும் நிலையில் தற்சமயம் ஐந்தாவது வில்லன் இருக்கிறார் என்ற தகவலும் சினி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
எந்த பக்கம் திரும்பினாலும் ‘லியோ அப்டேட்’ மற்றும் ஏகே 62 அப்டேட் என்று தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிலையில் பட குழுவினர் காஷ்மீரில் எடுத்த நிறைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போதா குறையாக நிறைய முன்னணி நடிகர்களும் படத்தில் இணை இருப்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது சமீபத்தில் பாலிவுட் வில்லன் ஆன சஞ்சய் தத் உடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ மேனன், நடிகர் அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற அனைத்து தமிழ் திரைப்படம் முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்டுகள் வெளியாகும் நிலையில் சினி வட்டாரங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது இந்த ‘லியோ’ திரைப்படம்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.