Connect with us

News

அரைகுறை ஆடை.. கையில் புள்ளையை வச்சிகிட்டு… கணவருடன் அமலாபால் விவகாரமான விளையாட்டு..!

By TamizhakamAugust 14, 2024 11:49 AM IST

திரை உலகில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக விளங்கியவர் நடிகை அமலா பால். இவர் முதல் படத்தில் மாமனாரை காதலிக்கின்ற விவகாரமான கதாபாத்திரத்தை செய்து சர்ச்சை நாயகியாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டார்.

இதனை அடுத்து மைனா படத்தில் நடித்ததை அடுத்து வெகுவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு குறுகிய காலத்திலேயே பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அரைகுறை ஆடை..

நடிகை அமலா பாலை பொறுத்த வரை தமிழ் திரை உலகில் குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்கள் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றிலும் நடித்த இவர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டார்.

இதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையாததை அடுத்து மன அழுத்தத்தில் இருந்த இவர் நண்பர்களுடன் பார்ட்டி, சரக்கு அடிப்பது ஆட்டம் போடுவது என்று எல்லை மீறிய செயல்களை செய்து அதனை இணைய பக்கங்களிலும் வெளியிட்டு விடுவார்.

அதுமட்டுமல்லாமல் புதிய படங்களில் நடிப்பதற்காக அத்து மீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய அடுத்தடுத்து கிசுகிசுகளுக்கு ஆளானதோடு இரண்டாவது திருமணமும் செய்து கொண்டதாக பேச்சுக்கள் வெகுவாக புகைந்தது.

கையில் புள்ளையை வச்சிகிட்டு..

இந்நிலையில் இவர் கெடாவர் என்ற படத்தை தயாரித்ததோடு அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

இதைத்தொடர்ந்து பட வாய்ப்புக்களை பெற்று வந்த இவர் மலையாளத்தில் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் பிரிதிவராஜின் மனைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்ததோடு இந்த படத்தில் லிப் லாக் காட்சிகள் நடித்து அனைவரையும் திணறவிட்டார்.

அத்தோடு தனது இரண்டாவது திருமணம் குறித்து இணையங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்ததை அடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேச என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்கள் திருமணம் நடைபெற்று சில மாதங்களிலேயே கர்ப்பிணியாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இவர் கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். மேலும் இந்த குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் அந்த ஆசை அடங்கவில்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது instagram பக்கத்தில் தனது கணவருடன் ஓவர் ரொமான்ஸில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

கணவருடன் அமலாபால் விவகாரமான விளையாட்டு..

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடியதோடு இருவரும் குழந்தையை கையில் வைத்திருக்கும் போட்டோவை ஷேர் செய்வதோடு மட்டுமல்லாமல் தனது ஆசை கணவருக்கு அமலா பால் லிப் லாக் முத்தம் கொடுத்து இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து பல்வேறு வகையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கும் ரசிகர்கள் அமலா பால் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள ரெடியாகிவிட்டாரா? என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்து விட்டார்கள்.

தற்போது ஓவர் ரொமான்ஸில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாக மாறி உள்ளது. மேலும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top