ஹைதராபாத்தில் மனைவியை கொன்று துண்டு துண்டாக்கி, குக்கரில் வேகவைத்த கணவனின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு செய்தியாளர்களிடம் விவரித்த தகவல்கள் மேலும் பகீர் அளிக்கின்றன.
கொலையின் பின்னணி
தெலங்கானா மாநிலம் மேட்சல் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி, தனது மனைவி மாதவியை அடித்துக் கொன்றார். விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே கொலை செய்ததாக குருமூர்த்தி கூறியுள்ளார்.
கொலையை அரங்கேற்றுவதற்கு சங்கராந்தி பண்டிகையை அவர் பயன்படுத்தியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு, பின்னர் அவர்களைத் திரும்ப அழைத்து வந்த குருமூர்த்தி, திட்டமிட்டபடி கொலையை செய்துள்ளார்.
தன்னுடைய கொலை திட்டத்திற்கு சங்கராந்தி பண்டிகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். மனைவி, குழந்தைகளை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பிள்ளைகள் இரண்டு பேரையும் உறவினர் வீட்டில் தங்கச் செய்த குருமூர்த்தி, மனைவி மாதவியுடன் கடந்த 15-ம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். 16ம் தேதி காலை 10 மணிக்கு, தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.
அப்போது மாதவியின் தலைமுடியைப் பிடித்து தலையை சுவற்றில் மிகவும் பலமாக மோதியிருக்கிறார். இதில், மயங்கி விழுந்த மாதவி உடல் மீது ஏறி உட்கார்ந்து குருமூர்த்தி, கழுத்தை நெறித்து மூச்சுதிணறச் செய்து கொன்றிருக்கிறார். உடலை அப்புறப்படுத்துவதற்காக, வீட்டில் இருந்த பெரிய கத்தியை பயன்படுத்தி முதலில் கால், கைகள், தலை என்று மனைவியின் உடல்பாகங்களை தனித்தனியாக துண்டு துண்டாக வெட்டி, அவற்றை வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார்.
கொடூர கொலை மற்றும் உடல் பாகங்களை அழிக்கும் முயற்சி
கொலை செய்த பின்னர், உடலை அப்புறப்படுத்த குருமூர்த்தி பல்வேறு கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் இருந்த பெரிய கத்தியை பயன்படுத்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி, பின்னர் அவற்றை குக்கரில் வேக வைத்துள்ளார்.
பின்னர் அவற்றை பொடியாக்கி சாக்கடையில் வீசியுள்ளார். உடல் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி அழிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
காவல் ஆணையரின் வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குருமூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து வேறுபாடுகள் காரணமாகவே கொலை நடந்துள்ளது. குருமூர்த்தி தனது கொடூர செயலை ஒப்புக்கொண்டுள்ளார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தடயங்களை சேகரித்து, கொலைக்கான ஆதாரங்களை உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சமூகம் மற்றும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
--- Advertisement ---