Connect with us

News

16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த நடிகை அஞ்சலி..! பதறிப்போன படக்குழு..!

By TamizhakamJuly 15, 2024 5:30 AM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை அஞ்சலி ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். மேலும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ரசூல் பகுதியில் 1986 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி பிறந்தவர்.

திரை உலகில் வருவதற்கு முன்பு சின்ன, சின்ன கேரக்டர்களில் தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை அஞ்சலி..

அந்த வகையில் இவர் தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்வதை அடுத்து சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

இதனை அடுத்து 2010-இல் வெளி வந்த அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட இவர் விரைவில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

மேலும் தமிழைப் பொறுத்த வரை எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டை சுழி, தூங்க நகரம் மகாராஜா, கருங்காலி, கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி, மாப்ள சிங்கம் போன்ற படத்தில் நடித்து அசத்தினார்.

பலூன் படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகர் ஜெயிக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் லிவிங் டுகதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இதை அடுத்து ஜெயின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் பிரேக்கப் செய்து விட்டு தற்போது சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

பதினாறு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை அஞ்சலி தனது ரசிகர்களை குஷிப்படுத்த அடிக்கடி instagram பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் தற்போது ஈகை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது.

இறைவி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு இந்த ஈகை படம் 50-வது படமாக அமைந்துள்ளதால் தான் இந்த எதிர்பார்ப்பு எகிரி உள்ளது என்று சொல்லலாம்.

அத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு கடுமையான ரிஸ்க்குகளை எடுத்து அஞ்சலி இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

பதறிப்போன பட குழு..

இந்த திரைப்படத்தை அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கியமான காட்சி ஒன்று படப்பிடிப்பு செய்யப்பட்ட போது இவர் 16 மாடி கட்டிடத்தில் இருந்து டூப் இல்லாமல் குதித்திருக்கிறார்.

இதனை அடுத்து பட குழுவில் இருந்த அனைவருமே பதறிப் போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

அதுமட்டுமல்லாமல் டூப் இல்லாமல் இந்த காட்சியில் நடித்ததை பார்த்து பட குழு, காட்சி படமாக்கப்பட்டு முடியும் வரை பதட்டத்தில் இருந்துள்ளது என்பது கூடுதல் தகவலாக வெளி வந்துள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் விரைவில் இவர் தமிழ் திரையில் முன்னணி இடத்தை பிடிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருவதால் இவரை முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் ஒருவராக விரைவில் பார்க்கலாம் என்று சொல்லி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top