Connect with us

News

“மொட்டை மாடியில் மொரட்டு கட்ட…” – குளுகுளு போஸ் கொடுத்துள்ள இளசுகளை சுண்டி இழுத்த நடிகை அஞ்சலி..!

By TamizhakamSeptember 22, 2022 5:54 AM IST

மொட்டை மாடியில் மொரட்டு கட்ட என்று நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அந்த அளவுக்கு தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அஞ்சலி.

அதன்பிறகு அங்காடித்தெரு, தூங்காநகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தொடர்ந்து நடிகை அஞ்சலிக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. குறிப்பாக அங்காடித்தெரு திரைப்படமும் எங்கேயும் எப்போதும் திரைப்படமும் நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத மறக்க முடியாத திரைப்படங்களாக மாறியது.

அங்காடித்தெரு திரைப்படத்தில் துணிக்கடையில் வேலை செய்யும் பெண்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் உணர்வு ஆகியவற்றை அப்படியே உள்வாங்கி நடித்து இருந்தார் நடிகை அஞ்சலி. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியான பிறகு துணிக்கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு அமர்ந்து கொள்ள இருக்கைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

அந்த அளவிற்கு இந்தப் படம் பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டு பண்ணியது என்று கூறவேண்டும். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்ட நடிகை அஞ்சலி அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் அவருடன் பிரேக்-அப் செய்து கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தம் ஆனார் நடிகை அஞ்சலி. ஜெய்யுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது தனக்கு வந்த படவாய்ப்புகள் சிலவற்றை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறார் நடிகை அஞ்சலி.

இதனால் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை. எனவே, ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அஞ்சலி தற்போது மொட்டை மாடியில் நின்றுகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொட்டை மாடியில் மொரட்டு கட்ட என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top