Connect with us

News

14 வயசுலையே அதை பண்ணிட்டேன்.. செந்தில் நல்லவரு ஆனா கவுண்டமணி?. அதிர்ச்சி கொடுத்த நடிகை அனுஜா ரெட்டி..!

Published on : September 13, 2024 4:38 PM Modified on : September 29, 2024 4:38 PM

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். கோவை சரளா மாதிரியான அந்த நடிகைகள் வரிசையில் அனுஜா ரெட்டியும் முக்கியமானவர். அனுஜா ரெட்டி ஆரம்பத்தில் மலையாளத்தில் நடித்து வந்தாலும் கூட அதற்கு பிறகு தமிழில்தான் அதிகமாக பிரபலமடைந்தார்.

அதிகபட்சம் தமிழில் நடிகர் கவுண்டமணிக்கு மனைவியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தனியாகவும் நிறைய திரைப்படங்களில் காமெடிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திரை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் அனுஜா ரெட்டி.

14 வயசுலையே அதை பண்ணிட்டேன்

அதில் அவர் பேசும்பொழுது நான் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்து விட்டேன். 14 அல்லது 15 வயதிலேயே நடனமாடும் பெண்ணாக சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால் ஒரு சில பாடல்களில்தான் நடனமாடி இருப்பேன்.

18 வயதுக்கு பிறகு நான் படங்களில் கதாபாத்திரங்களாகதான் அதிகமாக நடித்தேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சிறுவயதிலேயே நீங்கள் இப்படி நடித்தது குறித்து உங்களது பெற்றோர் கேட்கவில்லையா? என்று கேட்ட பொழுது அவர்களுக்கு அந்த அளவிற்கு சினிமா அறிவு கிடையாது.

மேலும் எங்களுக்கு படப்பிடிப்பு செட்டில்தான் நடக்கும் என்பதால் பொதுமக்கள் பார்க்க முடியாது. அதனால் யாரும் எங்களை கவர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் பார்த்து விட முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது கவர்ச்சியாக நடனங்கள் ஆடும் போது கூட எங்களுக்கு கொடுக்கிற கவர்ச்சியான ஆடைகள் சரியில்லை என்று தோன்றினால் அதை எங்களுக்கு ஏற்ப மாற்றி கொடுப்பார்கள்.

செந்தில் நல்லவரு ஆனா கவுண்டமணி

ஒருவேளை ஏதாவது துணி அதிக கவர்ச்சியாக இருப்பதாக தோன்றினால் அதை எனக்கு சரி செய்தும் கொடுத்திருக்கின்றனர். அப்பொழுதுதான் அது பெரிய விஷயமாக இருந்தது. இப்பொழுது நடிகைகள் கூட கவர்ச்சி துணிகளை அணிந்து நடனம் ஆடுகின்றனர் என்று கூறியிருக்கிறார் அனுஜா ரெட்டி.

மும்தாஜ் மாதிரியான சில நடிகைகள் முந்தைய காலத்தில் கவர்ச்சியாக நடித்தது குறித்து இப்பொழுது கவலைப்படுகின்றனர். அப்படி நீங்கள் கவலைப்பட்டு உள்ளீர்களா என்று அவரிடம் கேட்ட பொழுது இல்லை நிச்சயமாக இல்லை, நான் என்னுடைய வேலையை ஒரு தொழிலாக தான் பார்த்தேன்.

அதிர்ச்சி கொடுத்த நடிகை அனுஜா ரெட்டி

இப்போது வரை நான் அதற்காக எப்பொழுதும் கவலைப்பட்டது கிடையாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கவுண்டமணிக்கும் அவருக்கும் இருந்த பிரச்சனையையும் அவர் கூறியிருக்கிறார். கவுண்டமணி செந்தில் இருவரில் எனக்கு செந்தில் தான் ரொம்ப பிடிக்கும் ஏனெனில் அவர்தான் மிக நல்லவர்.

கவுண்டமணியை பொறுத்தவரை அவர் கொஞ்சம் தலைகணமாக இருப்பார் எல்லோரையும் ஏதாவது முகத்தில் அடித்தார் போல பேசிக் கொண்டே இருப்பார். நானும் அப்படி பேசக்கூடியவர் என்பதால் எங்களுக்குள் பிரச்சனை ஆனது.

நேசம் என்கிற திரைப்படத்தில் நடித்த பொழுது வேலை செய்யும் சக ஊழியர்களை அவர் தவறாக பேசினார் அதனால் கடுப்பான நான் அவர் மூஞ்சி முன்னாடியே அவரை திட்டிவிட்டேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசவே இல்லை பிறகு உடன்பிறப்பு என்கிற திரைப்படத்தில் நடித்தபோது கூட என்னிடம் அவர் பேசவே இல்லை. பிறகு அவர் என்னுடன் நடிப்பதையே விட்டுவிட்டார் என்று கூறுகிறார் அனுஜா ரெட்டி.

More in News

To Top