Connect with us

News

அப்போ தெரியல..நான் செய்தது பெரிய தவறு இது.. வரலட்சுமி சரத்குமார் வேதனை!

By TamizhakamMärz 21, 2024 9:10 AM IST

தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையான வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

வாரிசு நடிகை என்ற அடையாளம்:

சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

இதையும் படியுங்கள்: பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..

தமிழை தாண்டி கன்னடத்தில் என்ட்ரி கொடுத்த வரலட்சுமிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். அங்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

இதனிடையே தமிழிலும் வாய்ப்புகளை தவறவிடாமல் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

இதனிடையே கொஞ்சம் வித்யாசமாக இருக்கட்டுமே என நினைத்து சட்டென சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.

கைகொடுத்த வில்லி ரோல்:

வரலட்சுமிக்கு ஹீரோயின் கதாபாத்திரத்தை விட வில்லி கதாபாத்திரம் செம்ம பொருத்தமாக இருந்தது. திரையரங்கில் ரசிகர்களின் கைதட்டல் அதிர்ந்தது.

கடைசியாக வரலக்ஷ்மி நடிப்பில் தெலுங்கில் வெளியான ஹனுமான் படம் ஓரளவுக்கு ஓடியது. இதனிடையே திடீரென தனது ரகசிய காதலனை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

திடீர் திருமணம்:

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கு 14 ஆண்டுகள் ரகசியமாக காதலித்து ஊரறிய திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு குறித்து பேசிய வரலக்ஷ்மி, «போடா போடி படத்துக்கு பிறகு சினிமாவில் நான் கவனம் செலுத்தாமல்….

இதையும் படியுங்கள்: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

பெர்சனல் வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது சினிமா கரியரில் நான் செய்த பெரிய தவறு.

வாழ்க்கையில் செய்த பெரிய தவறு:

அந்த வயதில் நாம் செய்வது தவறு என்றும் தெரியவில்லை. என்னுடைய கவனம் அப்போதே சரியாக மட்டும் இருந்திருந்தால் நிறைய படங்களில் நடித்திருந்திருப்பேன்.

சினிமா வாய்ப்புகள் எனக்கு வராதபோது, நான் அழகா இல்லையா, நன்றாக நடனம் ஆடவில்லையா, நன்றாக தமிழ் பேசவில்லையா என பல கேள்விகளை நான் கேட்டுக்கொண்டேன்.

அதையே நினைத்து கவலைப்படுவேன். ஆனால் அந்த சறுக்கல்கள்தான் என்னை பலப்படுத்தின» என போல்டாக பேசினார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top