Connect with us

News

பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. என சொன்னார். பிரபல இயக்குனர் மீது வாலு பட நடிகை பகீர் புகார்..!

By TamizhakamJuly 24, 2024 12:03 PM IST

வெள்ளித்திரையில் நடித்த நடிகைகள் கூட தற்போது சின்னத்திரையில் விரும்பி நடிக்கின்ற காலம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் இவர்கள் திரைப்படங்களில் அடையும் புகழையும் பிரபலத்தையும் போல சின்ன திரையில் நடிப்பதாலும் இது போன்ற புகழும், பிரபலமும் கிடைத்து விடுகிறது.

அதுமட்டுமில்லாமல் சின்ன திரையில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்து அங்கு சென்று ஜொலித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதற்கு உதாரணமாக வாணி போஜன் முதல் கொண்டு பிரியா பவானி சங்கர் வரை கூறலாம்.

பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்..

அந்த வகையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரை என்ற இரட்டை குதிரையில் பயணம் செய்து வரும் நடிகை அர்ச்சனா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவர் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளி வந்த வாலு திரைப்படத்தில் நடித்ததை அடுத்து வாலு பட நடிகை என்று கூட அழைக்கப்படுகிறார். இந்த படத்தில் இவர் கவுன்சிலர் மனைவியாக வந்து ரசிகர்களின் இதயத்தை டச் செய்தவர்.

இந்த படத்தை தொடர்ந்து கிடைத்த படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அசத்தி வரும் நடிகை அர்ச்சனாவிற்கு வாலு படம் தான் நல்ல அடையாளத்தையும் பிரபலத்தையும் பெற்று தந்தது.

இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளி வந்த திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வெள்ளைக்காரத்துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல படங்களில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரகளோடு செய்திருக்கக்கூடிய இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகின் நீதி, அருந்ததி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்ததை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார்.

இயக்குனர் மீது வாலு பட நடிகை புகார்..

இதனை அடுத்து அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான போஸ்களையும் கொடுத்து பலரையும் அதிர்ச்சியில் தள்ளி விடுவார், அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

அந்தக் குற்றச்சாட்டு என்னவெனில் இவர் நடித்துக் கொண்டிருந்த படத்தில் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு செவிலியர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதால் அதற்கு உரிய உடையை கொடுத்திருக்கிறார்கள்.

எனினும் அதற்கு முன்பாகவே இயக்குனர் அர்ச்சனாவை அழைத்து இந்த உடை உனக்கு பொருத்தமாக இருக்குமா? அல்லது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மூட்டுக்கு மேல் தூக்கி காட்டு என்று சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இயக்குனர் யதார்த்தமாகத்தான் கேட்கிறார் என்ற நினைப்பில் நடிகை அர்ச்சனாவும் அவர் சொன்னது போல முட்டிக்கு மேல் வரை தன்னுடைய உடையை தூக்கி காட்டி இருக்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

இதனை அடுத்து இயக்குனர் இன்னும் கொஞ்சம் மேல தூக்கு என்று சொன்னதை அடுத்து இவர் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை புரிந்து கொண்ட நடிகை அர்ச்சனா நாளை வந்து இந்த டிரஸ்ஸை போட்டு காட்டுகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.

இதனை அடுத்து அந்தப் படத்தில் நடிக்க போகவே இல்லை என்று பிரபல இயக்குனரின் மீது குற்றச்சாட்டு வைத்தால் என்னை எல்லோரும் திருப்பிக் கேட்பார்கள் என்று தான் இது வரை சொல்லாமல் இருந்தேன் என்று சொல்லி இருக்கும் இவரை பேச்சைக் கேட்டு பலரும் ஷாக்கிங் ஆகிவிட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top