நடிகை அதுல்யா ரவி தெலுங்கில் முதன் முறையாக ஒரு திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வருகின்றன.இதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.
தற்போது மீட்டர் என்ற திரைப்படத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் தன்னுடைய இணைய பக்கத்திலும் படம் சார்ந்த போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவருடைய முதல் தெலுங்கு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான ஏமாளி அதன்பிறகு அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ள திரைப்படங்கள் முக்கியமான படங்களாக அமைந்தன.
சமீபத்தில் நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான கடாவர் என்ற திரைப்படத்தில் ஏஞ்சல் ஜீசஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் முதன்முறையாக மீட்டர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.
View this post on Instagram
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சில இணையதளாகி வருகின்றது கதாநாயகனுடன் ஆட்டம் போடும் அதுல்யா ரவியின் இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Loading ...
- See Poll Result