Connect with us

News

மனைவியின் தாய்ப்பால் திருடி குடித்த பிரபல நடிகர்… அதிர வைக்கும் வினோத சம்பவம்!

By TamizhakamAugust 24, 2024 4:54 AM IST

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராகவும் நட்சத்திரம் நடிகராகவும் இருந்து வருபவர் தான் ஆயுஷ்மான் குர்ரானா. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா:

ஆயுஷ்மான் குர்ரானா 2004 ஆம் ஆண்டில் எம்டிவி ரோடீஸ் என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்றார்.

மேலும் இவர் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அவர் 2012 இல் வெளிவந்த திரைப்படமான ‹விக்கி டோனர்» படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.

அப்படத்தில் விந்தணு தானம் கொடுப்பவராக நடித்ததன் மூலம் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் .

அதன் பிறகு சில தொடர் தோல்விகளை சந்தித்தார். வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற டம் லகா கே ஹைஷா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது

இப்படி ஹிந்தி படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகிலும் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஆயுஷ்மான் குர்ரானா.

காரணம் இவர் நடித்த படங்கள் தமிழில் தொடர்ந்து ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த திரைப்படம் பிரஷாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகிய திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ்மானின் படங்கள் தமிழில் ரீமேக்:

பாலிவுட் ஹீரோக்களிலேயே மாறுபட்டவராக தென்படும் ஆயுஷ்மான் குர்ரானா தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர் ஆக இருந்து வருகிறார்.

இதனாலே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். மேலும், அவரது நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படத்தையும் ஆர்.ஜே பாலாஜி நடித்தது குறிப்பிடுத்தக்கது.

ஆயுஷ்மான் குர்ரானா கடந்த 2008 ஆம் ஆண்டு தஹிரா காஷ்யப் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் தற்போது பாலிவுட்டின் பேவரைட் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் என்னை இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .

இதனிடையே ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தார்.

ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி தஹிரா ஒரு பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சில படங்களிலும் பணி புரிந்து இருக்கிறார்.

தாய்ப்பால் திருடி குடித்த ஆயுஷ்மான்…..

இந்த நிலையில் The 7 Sins Of Being A Mother (தாயாக இருப்பதன் 7 பாவங்கள்) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில், தனது கணவர் குறித்து பேசியிருக்கும் அவர்,

நான் ஒரு முறை பாங்காக் பயணம் செய்வதற்கு முன்பு தனது 7 மாத குழந்தைக்காக தாய்ப்பாலை பாட்டிலில் எடுத்து வைத்திருந்த போது ஒரு சம்பவம் நடந்தது.

ஆம் அந்த பாட்டிலை காணவில்லை என்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்போது படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என்னுடைய கணவர் அதைக் கேட்டு குலுங்கி குலுங்கி வினோதமாக சிரித்தார்.

பிறகு அந்த பால் சரியான வெப்ப நிலையில் இருந்ததாகவும் அது தனக்கு சத்துக் கொடுக்கும் என்பதால் குடித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார் .

இந்த சம்பவத்திற்கு பிறகு நான் எப்போது குழந்தைக்காக பாலை எடுத்து வைத்தாலும் அதை மறைத்து விட்டு தான் செல்வேன் என கூறியிருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபலமான நடிகராக இருந்து வரும் ஆயுஷ்மான் குர்ரானின் இந்த குழந்தைத்தனமான வேலை. ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top