Connect with us

News

ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!

Published on : July 27, 2024 7:59 PM Modified on : September 29, 2024 7:59 PM

தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் என்பது கடந்த சில காலங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது பொதுமக்கள் மத்தியிலேயே ஒரு வகையான விரக்தியை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் பொதுவாகவே நட்சத்திரங்கள் என்றால் திருமணம் செய்து வெகுகாலங்கள் வாழ மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தார் போல இவர்களும் விவாகரத்து செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக ஜெயம் ரவி அவருடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனை:

உண்மையிலேயே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா என்பது இன்னமும் முழுதாக தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது நிறைய காரணங்களால்தான் ஜெயம்ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார்.

ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமார் ஒரு பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். ஆர்த்தி ஜெயம்ரவி திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் திரைப்படங்களை அவர்தான் தயாரித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

இது சுஜாதா விஜயகுமாருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ஜெயம் ரவியின் சம்பளத்தையும் குறைத்து இருந்தார் சுஜாதா விஜயகுமார்.

ஜெயம் ரவிக்கு வந்த பிரச்சனை:

மேலும் ஒரு திரைப்படமும் இதனால் ஜெயம் ரவியின் கை நழுவி சென்றது இதெல்லாம் ஒரு பக்கம் பிரச்சனையாக இருக்க மற்றொரு பக்கம் ஆர்த்தி கொடுக்கும் பிரச்சனைகளும் இதற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

அதாவது ஆர்த்தி பிறக்கும்போதே பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு நிறைய தோழிகள் உண்டு. எப்பொழுதுமே க்ளப்பிற்கு சென்று மது அருந்துவதை அவர் பழக்கமாக கொண்டிருந்தார். அப்படி ஒரு முறை க்ளப்புக்கு செல்லும் பொழுது தனுஷுடன் அவருக்கு பழக்கம் ஆகி அதனால் நிறைய பிரச்சனைகள் உண்டாகி இருக்கிறது.

இதனால் தொடர்ந்து ஆர்த்தியை இந்த மாதிரி மது அருந்துவதற்கு செல்லக்கூடாது என்று ஜெயம் ரவி கண்டித்து இருக்கிறார். மேலும் இது குறித்து சுஜாதா விஜயகுமாரிடமும் பேசியிருக்கிறார். ஆனால் தன்னுடைய செல்ல மகளை கண்டிக்காமல் இது சகஜமான விஷயம்தான் என்று கூறி சமாளித்திருக்கிறார் சுஜாதா விஜயகுமார்.

இதெல்லாம் காரணமாக அமைந்ததால்தான் தற்சமயம் தனது மனைவியை விவாகரத்து செய்யவிருக்கிறார் ஜெயம் ரவி என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

More in News

To Top