ஷோபா வாழ்க்கையவே பாலு மகேந்திரா அழிச்சிட்டான்.. குமுறும் பிரபல நடிகை..!

80ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை ஷோபா பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் முதன் முதலில். உத்ராத ராத்திரி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தனது திரை பயணத்தை தொடங்கினார் .

இவரது இயற்பெயர் மகாலட்சுமி படத்திற்காக இவர் ஷோபா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடித்து வந்த சோபா பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை ஷோபா:

குழந்தை நட்சத்திரமாக தமிழில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தட்டுங்கள் திறக்கப்படும் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதை அடுத்து அச்சாணி , நிழல் நிஜமாகிறது , ஒரு வீடு ஒரு உலகம், முள்ளும் மலரும், வீட்டுக்கு வீடு வாசப்படி, அகல் விளக்கு , வேலி தாண்டி வெள்ளாடு, மூடுபனி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

1979 ஆம் ஆண்டு வெளிவந்த பசி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட பெற்று நடிகை கௌரவிக்கப்பட்டார்.

இதனிடையே சோபாவின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால். இயக்குனர் பாலு மகேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1978 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான நடிகையாக பேசப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் சோபா.

தன்னைக் குறித்து வரும் மோசமான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் 1980 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

நடிகை ஷோபா தற்கொலை:

இவரது தற்கொலை விவகாரம் கோலிவுட் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது மரணத்தை குறித்தும் இவருடனான நட்பு குறித்தும் பிரபல நடிகையான சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் சாந்தி அப்பாவுடன் நடித்த போது இருவரும் சகோதரிகளாகவும் நெருங்கி பழகி தோழிகளாகவும் பழகி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷோபாவின் மரணம் குறித்து கண்கலங்கி பேசி இருக்கும் சாந்தி.

அவளுடன் “அவள் என் உயிர்’,காமம் குரோதம் மோகம், அக்கல்நாம என சில திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

அந்த படங்களில் சோபா என் தங்கையாக நடித்தார். அந்த படத்தில் நடிக்கும் போது நாங்க ரெண்டு பேருமே செட்டில் ஓடிப் பிடித்து விளையாடுவோம்.

நங்கள் சகோதரிகளாக பழகி வந்தோம் . அவளுக்கு அப்போ கிட்டத்தட்ட 13 வயசு தான் இருக்கும் என்னுடைய மடியில வந்து ஓடி வந்து உட்கார்ந்திட்டு விளையாடுவாள்.

மூடுபனி படப்பிடிப்பின் அப்போ அவளை நான் பார்த்தேன். அப்ப கூட என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க? என்று கேட்டேன்.

ஆனால், அவ அப்பகூட எதுவுமே சொல்லவே இல்ல. கடைசியா அந்த புடவையில் தான் நான் அவளை பார்த்தேன்.

அவள அழிச்சதே பாலு மகேந்திரா தான்:

பின்னர் அதே புடவையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது என்னால் இன்று வரை மறக்கவே முடியவில்லை.

அவள் என் குடும்பத்திற்கு மிக நல்ல தோழி. மிகவும் நெருக்கமாக இருந்தவர். என்னுடைய கணவருக்கு சோபாவை மிகவும் பிடிக்கும்.

என் குடும்பத்தில் ஒருவராக சோபா இருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட போது என் கணவர் ஓடி சென்று கதவை உடைத்து உடலை கீழே இறக்கினார் .

சோபா அப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவே இல்லை. ஷோபாவின் மரணத்திற்கும் அவரது மன உளைச்சலுக்கும் முழுக்க முழுக்க காரணம் பாலு மகேந்திரா தான்.

அவளின் வாழ்க்கையை அவர் நாசம் செய்து விட்டார். ஒருத்தருக்கு வாழ்க்கை கொடுக்கிறதா இருந்தா நல்ல வாழ்க்கையை கொடுங்கள்.

அதை விட்டுட்டு அவங்கள நம்ப வச்சு அவங்களோட வாழ்க்கையை அழிக்க கூடாது. மகேந்திராவை பார்த்தாவே எனக்கு பிடிக்காது.

சாந்தி வில்லியம்ஸ் கண்ணீர்:

அவன் இந்த பக்கம் வரான் என்றாலே நான் அந்த பக்கமாக போயிடுவேன் .என்னுடைய முதல் கேமரா மேன் அவர்தான்.

நல்லா பேசுவார் கடைசில நல்லா பேசி பேசி சோபாவின் வாழ்க்கையில் விளையாடி அந்த பெண் வாழ்க்கையை முடிச்சிட்டு போயிட்டாரு.

என்று மிகுந்த கண்ணீருடன் சாந்தி வில்லியம்ஸ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த பேட்டி தற்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam