Connect with us

News

இணையத்தில் லீக் ஆன பீஸ்ட் காட்சிகள்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

By TamizhakamMarch 28, 2022 7:19 AM IST

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. சமீபத்தில் வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வந்தது. இது படக்குழு மத்தியிலும் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படங்கள் டப்பிங் அமர்வின் போது எடுக்கப்பட்ட படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில் இப்படி லீக் ஆகும் காட்சிகள் படத்தின் மீதான ஹீட் மீட்டரை பொதுவெளியில்  அதிகப்படுத்தி வருகின்றது.

இப்படியான காட்சிகள் படக்குழுவினருக்கு தெரிந்தே தான் லீக் ஆகின்றது போல என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top