Connect with us

News

«பீட்ரூட் தயிர் பேஸ் பேக்..!» – எப்படி போட்டால் ஜொலிக்கலாம் மச்சி..!

By TamizhakamMärz 21, 2023 7:00 AM IST

இன்று முக அழகை பேணுவதற்காக எண்ணற்ற வழிமுறைகளை பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அதற்காக பல வகைகளில் பணத்தை செலவு செய்து கொண்டு பியூட்டி பார்லர்களுக்கு செல்கிறார்கள்.

 இனி அந்த நிலை நமக்குத் தேவையில்லை. வீட்டிலேயே உங்கள் முகத்தை இயற்கையான முறையில் அழகு படுத்தக்கூடிய ஒரு மிகச்சிறந்த பேஸ் பேக் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

 இந்த பேஸ் பேக்கை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தயாரித்து உங்கள் முகத்துக்கு போடுவதின் மூலம் உலக அழகியாக மாறலாம்.

பீட்ரூட் தயிர் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்

1.பீட்ரூட் 1

2.தயிர் இரண்டு அல்லது நான்கு டேபிள் ஸ்பூன்

3.ரோஸ் வாட்டர்

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோலை சீவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு பவுலில் மாற்றி விடுங்கள்.

இப்போது அரைத்த இந்த கலவையோடு தயிரை சேர்த்து சில நேரங்கள் வைத்திருக்கவும்.பிறகு இதனுடன் போதுமான அளவு ரோஸ் வாட்டரை சேர்த்து விடவும்.

பயன்படுத்தும் முறை

முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவி துடைத்து  விடுங்கள். பிறகு நீங்கள் பௌலில் வைத்திருக்கக் கூடிய பேஸ் பேக்கை நல்ல முறையில் உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து குறைந்தது அரை மணி நேரமாவது அப்படியே வைத்திருக்க வேண்டும்.

இதனை அடுத்து இந்த பேஸ் பேக் நன்கு காய்ந்த பிறகு உங்களது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து இரண்டு மாதங்கள் நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் நீங்கி பார்ப்பதற்கு சிவப்பாக காட்சியளிப்பீர்கள்.

நீங்களும் இந்த செயற்பாட்டை உங்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்தி பார்த்து எப்படி உள்ளது என்பதை பற்றிய கருத்துக்களை எங்களிடம்  தெரிவிக்கவும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top