Connect with us

News

«கோபம் இல்லாமல் கோவைக்காய் சாப்பிடுங்க பாஸ்..!» – நல்ல பலன்கள பெறுங்க..!!

By TamizhakamMärz 21, 2023 3:30 AM IST

பச்சை நிற காய்களில் கோவை காயும் ஒன்று. இந்த கோவைக்காவையை நீங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். இதனை சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மென் மேலும் மேம்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

கோவைக்காயை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்களது இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை ஏற்படும். இது குறிப்பாக ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதால் நிச்சயமாக சர்க்கரை நோயாளிகள் தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.

 உடல் எடையை குறைக்கக்கூடிய பணியில் அற்புதமான வேலையை இந்த கோவைக்காய் செய்வதால் இந்த கோவைக்காயை டயட் – லில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்.

உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தக் கூடிய பணியை மிகவும் அற்புதமாக இந்த கோவைக்காயால் செய்து முடிக்க முடியும். ஏனெனில் அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் அதற்கு உறுதுணையாக உள்ளது.

 மேலும் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் உற்பத்தியை இது அதிகரித்து மரபு சார்ந்த நோய்களை சரி செய்ய உதவி செய்கிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்க இது உதவி செய்வதோடு உடல் பருமனையும் குறைக்க உதவி செய்கிறது. எனவே கோவைக்காயை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும்.

கோவைக்காயில் வைட்டமின் பி2 போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைய உள்ளது. இவை நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு நினைவாற்றல் இழப்பு நோய் ஏற்படாமல் காக்கிறது.

 அதுமட்டுமல்லாமல் கை, கால்களில் வலிப்பு உணர்வு, பதட்டம், நரம்பு சார்ந்த பிரச்சினைகளை வெகு விரைவில் சரி செய்ய கோவைக்காயை வாரம் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் போதுமானது.

சிறுநீரகப் பாதையில் கால்சியம் மற்றும் பிற தாதுப்புகள் படிவதால் ஏற்படக்கூடிய சிறுநீரக கல்லை மிக எளிதில் கரைத்து வெளியே கொண்டு வரக்கூடிய திறன் படைத்ததாக இந்த கோவைக்காய் விளங்குகிறது.

 எனவே நீங்கள் சிறுநீரகப் பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இதனை தொடர்ந்து சாப்பிடுவதின் மூலம் இந்த பாதிப்பை சரி செய்ய முடியும்.

நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய் என்பதால் நீங்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மலச்சிக்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

 மேலும் இந்த கோவை காயை நீங்கள் உண்பதின் மூலம் இரைப்பை, குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது தீர்வாக உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top