ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை கொண்ட வல்லாரைக் கீரை பொதுவாக இன்று பலராலும் அறியப்பட்டு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு கொடி இனத்தைச் சேர்ந்த கீரையாகும். ஞாபக சக்தியை மட்டுமல்ல பல நன்மைகளை நம் உடலுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு இந்த கீரை வகிக்கிறது.
வல்லாரைக் கீரையின் பயன்கள்
ஸூஸ்ருத சம்ஹிதை என்ற ஆயுர்வேத நூலில் வல்லாரைப் பற்றி அதிக அளவு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வல்லாரை ஆற்றல் உள்ளது.
செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்து இதயத்தை வலுவூட்ட மிகச்சிறந்த பொருளாக இந்த வல்லாரை திகழ்கிறது.
தோலில் ஏற்படும் சரும நோய்களை நீக்கக்கூடிய தன்மை இந்த வல்லாரைக்கு உள்ளது. மேலும் காய்ச்சல், மூச்சுடைப்பு, இருமல் நாக்கில் ருசியின்மை போன்ற அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உள்ளது.
துவர்ப்பு சுவையுடைய இந்த வல்லாரைக் கீரை பித்தம் சார்ந்த உபாதைகளை நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியானது.
அஷ்டாங்க ஹிருதயம் என்ற ஆயுர்வேத மருத்துவ நூலில் இந்த கீரையானது மலக்கட்டை ஏற்படுத்தும் வாயுவைத் தூண்டும் எனவே இதனோடு நீங்கள் சிறிதளவு சீரகம் சேர்த்து சாப்பிடுவதின் மூலம் மலக்கட்டு வாயு தொந்தரவு ஏற்படாது. கப பித்த உபாதைகளை நீக்கும் எனக் கூறியிருக்கிறார்கள்.
உங்கள் ஆயுள் கூட வேண்டும் என்றால் வல்லாரை கீரையின் சாறை கொடுத்தால் போதுமானது. இதன் மூலம் உங்கள் உடல் பலம் பெருகும். குரல் வளம் நன்றாகும்.அறிவாற்றலை வளர்க்கும் தன்மை கொண்டுள்ளது.
என்றும் இளமையாக இருக்க இந்த வல்லாரைக் கீரையை நெய்யில் வறுத்து தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் இளமையாக காட்சியளித்தீர்கள்.
உடலில் ஏற்படக்கூடிய கொப்புளங்களுக்கு வல்லாரைக் கீரையின் சாறை பிழிந்து விட்டால் போதுமானது .அப்படியே கொப்பளங்கள் ஆறிவிடும். மேலும் தோல் பகுதியில் ஏற்படக்கூடிய புண்களை விரைவாக ஆற்றக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.
மேற்கூறிய நன்மைகள் நிறைந்த வல்லாரைக் கீரையை நீங்கள் ஒதுக்கி வைக்காமல் கிடைக்கும்போதெல்லாம் வாங்கி உனது சேர்த்துக் கொள்வதின் மூலம் இந்த நன்மைகளை எளிதில் பெற முடியும்.
Loading ...
- See Poll Result