Connect with us

News

“எனக்கு பின்னாடி வந்துட்டு.. இப்போ..” SK.. இது ஒன்னும் ஈஸி இல்ல.. போட்டு உடைத்த பரத்..!

By TamizhakamJuli 14, 2024 12:24 PM IST

தமிழ் திரை உலகில் 2003 – ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத் மிகச்சிறந்த நடிப்புத் திறன் பெற்றவர் என்பதோடு நடனத் திறமையும் மிக்கவர் என்பதை பல படங்களில் நீங்கள் அவர் நடனத்தை பார்த்து அறிந்து கொண்டிருப்பீர்கள்.

அதுவும் லஜ்ஜாவதியே பாடலுக்காக இவர் ஆடிய நடனத்தை பார்த்து இளைஞர்கள் அனைவரும் அவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து விவரிப்பு தமிழில் நடிக்கக்கூடிய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது.

நடிகர் பரத்..

நடிகர் பரத் 2004-ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்து அனைவரையும் திகைப்பில் ஆற்றினார். இதனை அடுத்து அதே ஆண்டு காதல் படத்தில் மதுரை இளைஞனாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பிப்ரவரி 14, பட்டியல், அழகாய் தான் இருக்கிறாய் பயமாக இருக்கிறது, எம் மகன், சென்னை, காதல், வெயில், கூடல் நகர், பழனி போன்ற படங்கள் பட்டையை கிளப்பியது.

இதனை அடுத்து கோ, வானம், அரவான், திருத்தணி, ஐந்து ஐந்து ஐந்து, கில்லாடி, சிம்பா போன்ற படங்களில் நடித்த இவருக்கு இதனை அடுத்து பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேராமல் போனதை அடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காளிதாஸ் படத்தில் நடித்த இவர் அந்த படத்தின் பகுதி இரண்டில் நடிக்க உள்ள பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார்.

எனக்கு பின்னாடி வந்த எஸ் கே இப்போ..

அந்த பூஜைக்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் குறித்து பரத் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு எனக்கு பின்னாடி வந்த எஸ் கே இப்போ முன்னணி நடிகராக மாறி இருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அது இல்லாமல் இந்த இடத்தை பிடிப்பதற்கு சிவகார்த்திகேயன் கடுமையான போராட்டங்களையும் உழைப்பையும் கொட்டித்தான் வந்திருக்க வேண்டும்.

அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பொறாமையாக இல்லை என்று ஓபனாக சொல்லி இருக்கிறார். மேலும் பட்டியல் படம் நன்றாக சென்று இருந்தால் இவரது திரையுலக வாழ்க்கை இன்று வேறு லெவலில் இருக்கும் என்று கூறியதை அடுத்து தொடர்ந்து எதிர்பார்த்த வெற்றிகளை நடித்த படம் தனக்கு தரவில்லை என்பதையும் கூறியிருக்கிறார்.

2019-ல் வெளிவந்த காளிதாஸ் திரைப்படம் இவருக்கு வெற்றியை தந்ததை அடுத்து அந்த படத்தின் பகுதி இரண்டில் நடிக்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி வெளிப்படையாக பேசி அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

இது ஒன்னும் ஈஸி இல்ல..

அதுமட்டுமில்லாமல் தனக்கு பின்னாடி திரைத்துறைக்கு வந்து இவ்வளவு சாதனை செய்திருக்கும் ஒருவரை பரத் அழைத்து சிறப்பு விருந்தினர் அந்தஸ்தை கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இருந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது என்றுமே உங்களை நம்ப வேண்டும். அப்படி நம்பாமல் இருப்பது தவறு என்பது போல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் உடைய தற்போதைய தொட்டு இருக்கும் உயரம், சம்பளம் குறித்து விரிவாக சொன்ன இவர் எப்போதும் நம்பிக்கையோடு இருப்பதின் மூலம் நன்மைகள் ஏற்படும் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பரத்தின் சிறந்த உள்ளத்தை பற்றியும் சிவகார்த்திகேயனின் நல்ல மனது பற்றியும் அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top