Connect with us

News

இளையராஜா செய்த துரோகங்கள்.. கண்ணீர் சிந்திய பாரதிராஜா… இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்..!

By TamizhakamSeptember 3, 2024 2:22 PM IST

இயக்குனர்களின் இமயம் என்று இப்போது வரை அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பொதுவாக திரைப்படங்களை இயக்கும் பெரும்பான்மையான இயக்குனர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவும் திரை துறையில் பெரிய இடத்தை பிடிப்பதற்காகவும் திரைப்படங்களை இயக்குவார்கள்.

அதனால் நல்ல கமர்சியல் கதாநாயகர்கள் கிடைத்தால் அவர்களை வைத்து சண்டை காட்சிகள் அதிகமாக வைத்துதான் ஒரு திரைப்படத்தை அவர்கள் இயக்குவார்கள். ஆனால் பாரதிராஜாவிற்கு தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது ரஜினி கமல் என்று இரண்டு கமர்ஷியல் நடிகர்கள் அவர் கைவசம் இருந்தனர்.

இளையராஜா செய்த துரோகங்கள்

ஆனாலும் கூட அவர்களை வைத்து சண்டை படம் எடுக்காமல் 16 வயதினிலே என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார். பல படங்களில் சண்டை போட்ட கமல்ஹாசனுக்கு அதில் கோவணத்தை கட்டிவிட்டார். ஆனால் அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. இப்படி அப்பொழுதே தனித்துவமான சினிமாவை எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் பாரதிராஜா.

பாரதிராஜா சினிமாவில் வந்த சமகாலத்தில்தான் இளையராஜா வைரமுத்து ஆகியோர் சினிமாவிற்கு வந்தனர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இளையராஜாவும் பாரதிராஜாவும் நண்பர்களாக இருந்தனர். இருவருமே ஒரே அறையில் தங்கி இருந்துதான் வாய்ப்புகளை தேடி வந்தனர்.

வைரமுத்து தாமதமாக இவர்களோடு வந்து சேர்ந்து கொண்டார். இந்த நிலையில் இளையராஜா ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது போல இப்பொழுது இல்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அவருக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனையாகிவிட்டது.

கண்ணீர் சிந்திய பாரதிராஜா

பாரதிராஜா உடனும் இப்பொழுது சுமூகமான உறவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பேட்டியில் பாரதிராஜாவிடம் பேசும்பொழுது இளையராஜாவும் வைரமுத்துவும் பாடல் பெரியதா அல்லது பாடல்களில் உள்ள வரிகள் பெரியதா என்று சண்டை போட்டு வருகிறார்கள்.

அது இரண்டும் சேர்ந்ததுதானே பாடல் என்று கேட்கும் பொழுது அவர்கள் முட்டாப் பசங்க இது கூட தெரியாமல் சண்டை போட்டுகிட்டு இருக்குறாங்க என்று கூறினார் பாரதிராஜா. மேலும் இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை கேட்பது குறித்து பாரதிராஜாவிடம் கேட்கப்பட்டது.

ஓப்பன் டாக்

அதற்கு பாரதிராஜா பதில் அளிக்கும் போது அவன் ஒரு முட்டாள், ஒரு படத்தை எடுக்கும் தயாரிப்பாளருக்குதானே அந்த பாடல் சொந்தமாக இருக்கும். அது எப்படி இசையமைப்பாளருக்கு சொந்தமாகும் நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்றால் அந்த வீட்டை கட்டிய மேஸ்திரி இந்த வீடு எனக்கு சொந்தம் என்று கூறினால் ஒப்புக்கொள்வீர்களா என்று கேட்டிருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top