Connect with us

News

இந்த வாரம் Evict ஆனது இந்த 2 பேர் தான்..! – எதிர்பாராத முடிவு..! – உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By TamizhakamNovember 25, 2023 8:31 PM IST

பிக் பாஸ் ஏழாவது சீசனில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் என கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்ற பேச்சு இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்நிலையில் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 55 நாட்கள் கடந்துள்ள நிலையில் போட்டியில் கலந்து கொண்ட ஏழு பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரே ஒருமுறை மட்டும் டபுள் எவிக்ஷன் நடந்தது. அந்த வகையில், இந்த முறை டபுள் எவிக்சன் என்று பலராலும் கணிக்கப்பட்டது. அந்த வகையில், இரண்டு போட்டியாளர்கள் தற்பொழுது வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

இந்த பிக் பாஸ் சீசனில் புதுப்புது விதிமுறைகளும், போட்டி முறைகளும், மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், இரண்டு பேரை வெளியேற்றும் டபுள் எவிக்ஷன் முறையும் புதிதான ஒன்றாக இருக்கிறது.

கடந்த முறை பாடகர் யுகேந்திரன் மற்றும் நடிகை வினுஷா தேவி ஆகியோர் டபுள் எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். அதில் வைல்ட் காடு என்று ஆக நுழைந்த ஆர்.ஜே.பிராவோ மற்றும் போட்டியாளர் அக்ஷயா ஆகிய இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த இருவருமே போட்டி ஆரம்பித்த முதல் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபாடு காட்டாமல் எல்லா விஷயங்களிலும் ஒதுங்கி இருந்தே 50 நாட்களை கடந்து விட்டனர். தங்கள் மீது யாரேனும் அபாண்டமான பழி கூறினால் கூட அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று விடுவதை இயல்பாக கொண்டு இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக ரேடியோ தொகுப்பாளராக இருந்து இணைய பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமான ஆர்.ஜே.பிராவோ தன்னை பற்றி பெண் போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா, மற்றும் ஐசு ஆகியோர் தகாத முறையில் பேசினார்கள் அதனை குறும்படமாக போட்டு காட்டியும் கூட எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

இப்படி ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா இருவரும் போட்டியில் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரும் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க போட்டியாளர் பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். யூடியுப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய மோசமான நடவடிக்கைகள் மூலமாக தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் இவரும் வெளியேற்றப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top