பிரேமம் படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான சாய் பல்லவி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டார். அதிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தெலுங்கில் சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் விராட்ட பர்வம். அவருடன் ராணா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தில் இடம் பெற்றுள்ள கோலு கோலு என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலில் யதார்த்தமான கிராமத்து பெண் வேடத்தில் காணப்படுகிறார் சாய் பல்லவி. அதோடு அவரது அதிர்ச்சியூட்டும் மான்டேஜ் காட்சிகளும் இடம் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து, இந்த படத்தில் சாய்பல்லவியின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு விதமான பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்திருப்பதோடு, ஏற்கனவே தெலுங்கில் அவர் நடித்த பிடா படத்திற்கு இணையான இன்னொரு முக்கியமான படமாக இருக்கும் என்று இந்த டீசரே அதிர விடுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
‘மாரி 2’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் வெளியான நாளிலிருந்தே யு டியுபில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து இந்திய அளவில் 5வது இடத்திலும், தென்னிந்திய அளவில் முதலிடத்திலும் அப்பாடல் உள்ளது.
அப்பாடலின் வரவேற்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், சாய் பல்லவியின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது. தனுஷ் உடன் இணைந்து சாய் பல்லவி அசத்தலான நடன அசைவுகளைக் கொடுத்த பாடல் அது. இன்னும் சிலரோ தனுஷை விட சாய் பல்லவி மிகப் பிரமாதமாக நடனமாடினார் என்றார்கள்.
இப்போது சாய் பல்லவியின் அடுத்த அசத்தல் டான்ஸ் ஆக சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ பாடல் இருக்கப் போகிறது. அப்பாடலின் லிரிக் வீடியோ கடந்த வாரம் வெளியானது. அதற்குள் 17 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் கடந்துள்ளது.
லிரிக் வீடியோவாக இருந்தாலும் இடையிடையே பாடலின் ஒரிஜனல் காட்சிகளையும் சேர்த்துள்ளார்கள். அதில் தன் இடையை வளைத்து, நெளித்து ஆடும் சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.
இன்னும் பாடல் வீடியோ வெளிவந்தால் அது ‘ரவுடி பேபி’ சாதனைக்குப் போட்டியாகவும் அமையும். ஏற்கெனவே, சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிடா’ படத்தில் சாய் பல்லவி நடனமாடிய ‘வச்சிந்தே’ பாடல் யு டியுபில் 292 மில்லியன் சாதனைகளைப் பெற்றது.
‘ரவுடி பேபி’ பாடல் வரும் வரை அந்தப் பாடல்தான் தென்னிந்திய அளவில் யு டியுபில் முதலிடத்தில் இருந்தது. இப்போது ‘சாரங்க தரியா’ பாடல் மூலம் மீண்டும் யு டியுபை அதிர வைத்துள்ளார் சாய் பல்லவி.