சமீபத்தில், பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர், யூ டியூப் புகழ் நடிகை ப்ரிகிடா. ஒரு பிரபலமான தமிழ் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பாகும் “ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார்.
இந்த சீரியலில் பவி டீச்சராக அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை பிரிஜிட்டா. தற்போது யூ டியூப் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ப்ரிகிடா.
இந்நிலையில், ப்ரிகிடாவிற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு சீனில் நடித்திருந்தார்.இந்நிலையில், இணையத்தில் பவி டீச்சர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இவரை ப்ரிகிடா என்றால் பலருக்கு தெரியாது, ஆனால் பவி டீச்சர் என்றால்
பலருக்கும் தெரியும் ஏனென்றால் அதுதான் அவரின் அடையாளம். பவி டீச்சர் என்ற
கதாபாத்திரம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இந்நிலையில், ஆளே இல்லாத காட்டில் புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், தரமான நாட்டுக்கட்ட என்று வர்ணித்து வருகிறார்கள்.