“ஒரு நைட்டுக்கு உங்க …… ” – வக்கிரமான கேள்வி எழுப்பிய நபருக்கு நீலிமா ராணி நெத்தியடி பதில்..!

 

மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளிடம் மிகவும் ஆபாசமாக மற்றும் வக்கிரமாக போலி கணக்குகள் மூலம் சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. 

 

பல நடிகைகள் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் ஒரு சில நடிகைகள் நெத்தியடியாக பதில் கொடுத்து அவர்களையே மிரள வைத்துவிடுகின்றனர்.அப்படி ஒரு விஷயத்தை தான் சீரியல் நடிகை நீலிமா ராணி செய்திருக்கிறார். 

 

அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் மிகவும் வக்கிரமாக ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். ஒரு இரவுக்கு எவ்வளவு என அந்த நபர் கேட்ட கேள்வியை பார்த்து கடும் கோபமான அவர் அவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். 

 

“நான் கொஞ்சம் கண்ணியத்தை எதிர்பார்க்கிறேன் சகோதரா. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். மற்றவர்களை இப்படி துஷ்பிரயோகம் செய்வது வக்கிரமான புத்தி. தயவுசெய்து சைக்காலஜிஸ்டை சென்று பார். உனக்கு உதவி தேவை” என நீலிமா கூறி இருக்கிறார். 

 

நீலிமா இப்படி தரம் தாழ்ந்த கேள்வியை கேட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். நீலிமா சின்னத்திரை சீரியல்களில் தொடர்ந்து நடித்து முத்திரை பதித்தவர். 

 

அவர் அரண்மனை கிளி என்ற சீரியல் ஒன்றில் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து திடீரென விலகினார். அதற்கு பிறகு அந்த சீரியலையும் முடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Tamizhakam