சினிமாவில் இருந்து சீரியலுக்கு சென்ற காலங்கள் மாறி சீரியலில் இருந்து சினிமாவுக்கு பலர் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரே ஒரு சீரியலின் மூலம் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். அவரைத் தொடர்ந்து சன் டி.வி யில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.
தற்போது இவர் தமிழ் சினிமாவில் நடிகர் வைபவ் உடன் லாக் அப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். இவரின் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அந்த வகையில், இவரது லேட்டஸ்ட் மொட்டைமாடி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர், “,ஹோம்லியா இருந்த நீங்க இப்படி ஆகிடீங்களே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.