தமிழ், மலையாள சினிமா ரசிகர்கள் பாகுபாடில்லாமல் ஒரு நடிகையை கொண்டாடுகிறார்கள் என்றால் அது நஸ்ரிய நசீம் தான். மற்ற நடிகைகளுக்கு இருந்தாலும் இவருக்கு ஹேட்டர்ஸ் இல்லை என்றே சொல்லலாம்.
கவர்ச்சி காட்டாமல் தனது முக பாவனைகளாலே மொத்த ரசிகர் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார். சிறுவயதில் சூப்பர் சிங்கர் மாதிரியான போட்டியில் கலந்துகொண்டு பின் நடிப்புக்கு வந்தவர், பெரும்பாலும் நடித்தது மலையாள சினிமாதான்.
ஆனால் அவரை தேடி கண்டுபிடித்து ரசிக்கத் தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள். இதுவரை தமிழில் ஐந்துக்கும் குறைவான படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் மவுசு குறையாமல் டாப்பில் இருக்கிறார்.
நடிகை நஸ்ரியா என்ற பெயரை கேட்டாலே இள வட்ட சினிமா ரசிகர்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சினது போன்ற உணர்வு ஏற்படும். அந்தளவிற்கு இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம்.
நேரம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள போதிலும் தமிழக இளைஞர்களின் இப்போதைய நிலையிலும் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.
கடந்த 2014ம் தனது மார்க்கெட் பீக்கில் இருந்த நேரத்தும் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இல்லற வாழ்வில் நுழைந்தநிலையில், நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கினார் நஸ்ரியா.
மலையாளத்தில் இவர் நடித்த ஓம் சாந்தி ஓசானா, பெங்களூர் டேஸ், கூடே, தமிழில் ராஜா ராணி, நேரம், நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்கள் நடித்தார்.
உருவத்தை இவரை வார்த்தெடுத்தது போல் வர்ஷா பொல்லம்மா இருந்தாலும் இவரது ரியாக்சன் களுக்கு ரீப்ளேஸ்மென்ட் கிடைக்கவில்லை.
நமது சமூக வலைதளங்களில் தனது அப்டேட்டை வெளியிட்டு வரும் நஸ்ரியா தற்போது புகைப்படத்தை வெளியிட்டு சூரியன் என்னை முத்தமிட்டதா..? இல்லை எரித்துக்கொண்டிருகிறதா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “கில்மா சேச்சி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்