தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் புகழ்பெற்ற பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. முதன் முதலாக விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றினார்.
அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சுந்தரி என்ற தொடரில் நாயகியாக நடிக்கிறார். அழகும், நிறமும் இல்லாமல் இருக்கும் கிராமத்து பெண்ணான சுந்தரி.
தன் உழைப்பால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறாள் என்பதுதான் சுந்தரியின் கதை சுருக்கம்.வெள்ளித்திரையை விட, சின்னத்திரை பிரபலங்களுக்கு எளிதில் ரசிகர்களிடம் ஒருவித நெருக்கம் உண்டாகி விடுகிறது.
காரணம் தினந்தோறும் ரசிகர்கள் அவர்களை டிவி-யில் பார்க்கிறார்கள். ஹீரோயின் எனில், தங்கள் வீட்டு பெண் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. வில்லி என்றால், தங்களுக்கே இருக்கும் நிஜ எதிராளி என்பது போல உணர்கிறார்கள்.
இந்த சுந்தரி சீரியலில் டைட்டில் ரோலில் நடிப்பவர் கேப்ரில்லா செல்லஸ். டிக்டாக் மூலம் பிரபலமாகி, கடந்த 2016-ம் ஆண்டு விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா..? என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.