பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர் என்று சீக்கிரமே பேர் எடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். என்னதான் ஜாலியாக இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லி விடுகிறார்.
ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பல இடங்களில் ஒருதலைபட்சமாக பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆரியை அவ்வளவுக்கு அவ்வளவு மட்டம் தட்டி வருகிறார்.
இதனால் இவருக்கு எதிர்மறை கருத்துக்கள் வந்ததால் அம்மணியின் இமேஜ் டேமேஜ் ஆகிப்போனது. தற்பொழுது உள்ள பல இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் தங்களது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தனது மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து டம்மி பட்டாசு, சமுத்திரக்கனி உடன் இணைந்து ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தார். பிறகு சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்து வந்தார்.
தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது பவுன்சர்கள் புடை சூழ நின்றிருக்கும் ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று கலாய் மீம்களை வெளியிட்டு வருகிறார்கள்..