குழந்தை நட்சத்திரமாக அனைவருக்கும் அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர்.
சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டதுடன் சில காட்சிகளில் கண்ணீரையும் வரவழைத்து இருப்பார்.
நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்சன் ப்ளாக் பஸ்டர் திரைப்படமான வி -யில் நடித்திருந்த நிவேதா தாமஸ் இப்பொழுது பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்திலும் நடித்து வர தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ்ஸில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் ஃபேவரிட்டாக இருந்த மை டியர் பூதம் ஃபேண்டசி சீரியல் நெடுந்தொடரில் குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் இப்போது வளர்ந்து கதாநாயகியாக பல திரைப்படங்களை நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.
மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் அதிக அளவு நடித்துவரும் நிவேதா தாமஸ் விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.
அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது சில புகைப்படங்களைவெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் ப்யூட்டி.. என்னா லிப்ஸ்சு..” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.