இந்த இடத்தில் தான் முதன் முதலில் எனக்கு பீரியட் ஆனது – வெளிப்படையாக கூறிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

பெண்கள் பேச வெட்கப்பட்டு ஒதுங்கும் விஷயங்களை சில நடிகைகள் துணிச்சலாக பேசி வருகின்றனர். தல அஜீத்குமாருடன் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தான் பருவம் அடைந்த நாள் பற்றி வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,எனக்கு 14 வயது. குடும்பத்தினர் பூஜை அறையில் பூஜையில் ஈடுபட்டிருந்தனர். நானும் அவர்களுடன் அமர்ந்திருந்தேன். எனது அம்மா அருகில் நான் அமர்ந்திருக்கவில்லை. அந்த நேரம் பார்த்து எனக்கு பீரியட் ஆகிவிட்டது. 

 

எனக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அது பற்றி அருகிலிருந்து என் அத்தையிடம் கவலையுடன் கூறினேன். அப்போது என்னிடம் சேனட்டரி பேட் கூட இல்லை. நான் இப்படிச் சொல்வதை அருகிலிருந்த இன்னொரு பெண்மணி கேட்டுக் கொண்டிருந்தார். 

 

அவர் எனக்குத் தைரியம் கூறினார். பரவாயில்லை குழந்தை. கவலைப்படாதே கடவுள் மன்னித்து விடுவார் என்று ஆறுதலும் தைரியமும் கூறினார். அன்றைய தினம்தான் நான் வயதுக்கு அதாவது பெண்மை அடைந்தேன் என்றார். 

 

ஷ்ரத்தா ஸ்ரீநாத் திடீரென்று இந்த விஷயத்தைச் சொல்ல என்ன காரணம் என்ற போது, உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் யூனிசெப் அறிவித்துள்ள ரெட் டாட் சேலஞ் என்ற ஒரு சவாலைக் கவனத்தில் கொண்டு தாங்கள் பருவத்துக்கு வந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கி உள்ளனர். 

 

அந்த வரிசையில் ஷ்ரத்தாவும் தான் வயதுக்கு வந்த விவரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam