மலையாளம், தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த அனிகா தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளார்.தமிழில் அஜித்திற்கு மகளாக நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்கள் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த குழந்தை நட்சத்திரமாக மாறினார் அனிகா சுரேந்திரன்.
அதன் பின்னர் நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் குட்டி நயன்தாரா அனிகா.
சிறுமியாகவும் இல்லாமல், பருவ பெண்ணாகவும் இல்லாமல் விதவிதமாக கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். இந்நிலையில் வெளியே செல்லவே பயமா இருக்கு.. அதிகமாக வெளியில் செல்வதே இல்லை என கூறியுள்ளார்.
அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக கூறியிருக்கிறார். இவர் தனது aசமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.