“கவர்ச்சி உடையில் குனிந்த படி போஸ்..” – ரசிகர்களை திக்குமுக்காட வைத்த கீர்த்தி சுரேஷ்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ்த் திரையுலகில் கவர்ச்சியாக நடிக்காமலும் சாதிக்க முடியும், பிரபல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடிக்க முடியும் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.  

 

மலையாளப் படத் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமாருக்கும் தமிழரான நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். 4-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தவர் பிறகு கேரளா சென்று மீதிப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஃபேஷன் டிசைன் படிப்பதற்காக மீண்டும் சென்னை வந்துவிட்டார். 

 

இதனால் நடித்துள்ள அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சில மலையாளப் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், 2013-ல் பிரியதர்ஷனின் கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக நடித்தார். நான் நடிக்க வந்ததற்கு என்அம்மா மேனகாவும் ஒரு காரணம். 

 

அவர் நடித்த படங்களை பார்த்தது முதல் சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டுமென்ற ஆசை எனக்குள் இருந்தது. மேலும் எனக்கு தூண்டுதலாக இருந்தவர் என் அம்மாவின் சகோதரர் கோவிந்த அங்கிளும் காரணமாவார் என்று நடிப்பின் மீதான ஆசை பற்றி கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

 

அந்தப் படம் சரியாக ஓடவில்லை. ஆனால் அடுத்த வருடம் அவருக்காக ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமொன்று காத்திருந்தது ரஜினி முருகன். கார்த்திகா தேவி வேடத்தில் சிவகார்த்திகேயனின் காதலியாக ஜாலியாக நடித்துப் பெயர் பெற்றார். 

 

உன் மேல கண்ணு பாடல் கீர்த்தி சுரேஷின் அடையாளமாக மாறிப்போனது. முதலில் தொடர்ந்து மூன்று மலையாளப் படங்களிலும் பிறகு ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகனின் வெற்றியால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

 

 

அவர் நடிப்பில் அடுத்து வெளியான ஐந்து படங்களும் தமிழ்ப் படங்களாக இருந்தன. ரஜினி முருகனுக்கு அடுத்து தனுஷுக்கு ஜோடியாக தொடரி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் தோல்வியடைந்தாலும் இதில் அவருடைய நடிப்பைப் பார்த்துதான் மகாநடி வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. 

 

 

ரெமோ படத்துக்காகப் பல கதாநாயகிகளைப் பார்த்தும் சரியாக வராததால் சிவகார்த்தியனின் ஜோடியாக மீண்டும் தேர்வானார் கீர்த்தி சுரேஷ். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தப் படமும் கீர்த்தி சுரேஷின் வெற்றிப் படங்களில் இணைந்தது.

 

 

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்திலும் அவருடைய ஜோடியாக நடித்தார். இதுபற்றி இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது: ஏற்கெனவே இருவரும் ரஜினி முருகன் படத்தில் நடித்துவிட்டதால் வேறு கதாநாயகியைதான் தேடினோம். ஆனால் டாக்டர் கதாபாத்திரத்துக்கு அவரே தேர்வானார். 

 

 

பி.சி. ஸ்ரீராம் சார், கீர்த்தி சுரேஷைப் பரிந்துரை செய்தார். அதேபோல என் குழுவும் நன்குத் தமிழ் தெரிந்த நடிகையே வேண்டும் என்பதால் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் என்றார். விஜய்க்கு ஜோடியாக பைரவாவில் நடித்தார். 

 

 

அப்பாவிப் பெண் வேடத்தில் அவர் நடித்த இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

தற்போது, ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் கவுன் உடையில் மொட்டை மாடியில் இப்படி அப்படி வளைந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Leave comment

Tamizhakam